”இந்திய பெருங்கடலில் 3 கடுமையான புயல்கள்” : தென் கடலோர மாவட்டங்களுக்கு ஆபத்து : அலர்ட் செய்யும் இஸ்ரோ!

இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது.
ISRO warned that possibility of three severe cyclones forming in the North Indian Ocean region by the end of this year
ISRO warned that possibility of three severe cyclones forming in the North Indian Ocean region by the end of this yearsource:thamizhalai,ai generated
1 min read

ISRO Predicts 3 Severe Cyclones Over North Indian Ocean in Q4 2026

இஸ்ரோவின் கணிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

கடுமையான புயல்கள் உருவாகும்

2026ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று தீவிர புயல் சூறாவளிகள் உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

44 ஆண்டுகளில் இல்லாத அளவு வலுவானவை

இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் மற்றும் தாக்கம் கடந்த 44 ஆண்டுகளின் சராசரியை விட மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புயல்கள்

புயல்களின் தீவிரத்தன்மை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றைக் கணக்கிடும் முறையின்படி, இந்த ஆண்டு தாக்கும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

உருவாகும் 3 புயல்களும் 3 தீவிர வெப்பமண்டல புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தீவிர எல்நினோ தாக்கம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

புயல்களின் வேகம் 83% அதிகமாக இருக்கும்

புயல்களின் ஒட்டுமொத்த ஆற்றல் குறியீடு (Power Dissipation Index - PDI) வழக்கத்தை விட 83% அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும் அலர்ட்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, , ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளை இந்த புயல்கள் தாக்கி கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் இஸ்ரோ அமைப்புகள் கடல் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

===

logo
Thamizh Alai
www.thamizhalai.in