மனிதக் கழிவு அள்ளும் விவகாரம் : தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம் : விளக்கமாக பதில் அளிக்க உத்தரவு..!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் தற்போதும் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என கேல்வி எழுப்பியுள்ளது
issue of manual scavenging: Supreme Court issues warning to Tamil Nadu government.
issue of manual scavenging: Supreme Court issues warning to Tamil Nadu government.google
1 min read

மனிதக் கழிவுகளை அள்ளும் விவகாரம் , எச்சரித்த உச்சநீதிமன்றம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயில்களின் அருகே உள்ள பாதாள சாக்கடையை பணியாளர் ஒருவர் இறங்கி சுத்தம் செய்த விவகாரத்தில் தாக்கல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,” டெல்லி அரசின் பொதுப்பணித்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

இருப்பினும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநில அரசுகள் சரிவர பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இருந்தது.

கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருக்கக் கூடாது என்று முன்னதாக தெளிவாகக் கூறியிருந்தும், இப்போதும் ஏன் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என் உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது

உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்...

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவாகக் கூறியிருந்தும், இப்போதும் ஏன் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என கேள்விகளை முன்வைத்தனர்.

வழக்கு விசாரணை, எச்சரித்த நீதிபதிகள்

மனிதக் கழிவுகளை அள்ளவும், கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதனைப் பயன்படுத்தக் கூடாது என்று 2023 உத்தரவிட்ட பின்னரும், கடந்ந 2024ம் ஆண்டு முதல் 2025 வரையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் எப்படு உயிரிழந்தனர்.

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை நாங்கள் நேரில் வரவழைக்க நேரிடும் என்று கூறி மனித கழிவுகளை அள்ளும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரித்து விளக்கம் கேட்டுள்ளது

உத்தரவை பின்பற்றாத அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்

குறிப்பாக இதற்கு முந்தைய உத்தரவுகளை முறையாக செயல்படுத்தாத மாநிலங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்வியெழுகிறது என்று கடும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள்...

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்கண்ட நான்கு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in