ஜந்தர் மந்தர் போராட்டம்: தன்னையும் தாயாரையும் அவதூறாகப் பேசிய இளைஞர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னையும் தனது தாயாரையும் அவதூறாகப் பேசிய இளைஞர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
Jantar Mantar Protest: I forgive the youths who spoke abusively about me and my mother – PM Modi's emotional statement.
Jantar Mantar Protest: I forgive the youths who spoke abusively about me and my mother – PM Modi's emotional statement.google
2 min read

Jantar Mantar Protest: I forgive the youths who spoke abusively about me and my mother – PM Modi's emotional statement.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பல்லும் நாக்கும் நம்முடையதே” பிரதமர் மோடியின் உருக்கமான உவமை

வெளியிடப்பட்டுள்ள காணொளியில் பேசிய பிரதமர் மோடி, "ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது இளைஞர்கள் சிலர் என்னைப் பற்றியும், எனது மறைந்த தாயார் பற்றியும் மிகவும் மோசமான சொற்களைப் பயன்படுத்திப் பேசியது மனதுக்கு மிகுந்த வேதனையளித்தது.

இருப்பினும், தவறு செய்வது இளமைப் பருவத்தின் இயல்பு. அந்தத் தவறுகளிலிருந்து திருந்த அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,

"அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதாலோ அல்லது சமூக அளவில் அவர்களைத் தனிமைப்படுத்துவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் வழிதவறிய குழந்தைகள். அவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதே நமது கடமையாகும்."

தனது முடிவை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

"நாக்கு தவறி பல்லில் கடிபட்டு ரத்தம் வந்தாலும், நாம் பல்லை உடைப்பதில்லை. ஏனெனில், பல்லும் நாக்கும் நம்முடையதே" என்ற உவமையைக் சுட்டிக்காட்டிய பிரதமர், மாணவர்களை மன்னிக்கும் தனது முடிவை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இணைந்து செயல்பட இளைஞர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு நேரடியாகக் கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, "வாருங்கள், நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து முன்னோக்கிச் செல்வோம். நமது தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நமது கனவுகளை நோக்கிப் பயணிப்போம்.

மானவர்களுக்கு பிரதமர் அழைப்பு

இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, நீங்கள் ஒவ்வொருவரும் அதேபோல் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனக் கூறி இணைந்து செயல்பட மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, பிரதமரை அவதூறாகப் பேசியது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது 'பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர்' (Zero FIR) பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக டெல்லி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் உருக்கமான செய்திக்குப்பின் வெளியீடு

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை அவதூறாகப் பேசிய இளைஞர்களைத் தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டுப் பேசிய சில மணி நேரங்களிலேயே, அப்பெண்ணின் மன்னிப்பு காணொளி வெளியாகியுள்ளது.

தூண்டுதலால் வந்த தவறு

"போராட்டத்தில் பங்கேற்ற சிலரின் பேச்சைக் கேட்டு, பிரதமர் மோடிக்கு எதிராகப் பல தவறான வார்த்தைகளைப் பேசிவிட்டேன்.

உருக்கமான வேண்டுகோள்

"ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் செயலால் நான் மிகுந்த வெட்கப்படுகிறேன்; என்னையே என்னால் பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்," எனக் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in