வெளியானது ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள், 56,880 மாணவர்கள் தேர்ச்சி!

நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சேருவதற்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
JEE Main exam results released, 56,880 students pass
JEE Main exam results released, 56,880 students pass google
1 min read

ஜேஇஇ நுழைவு தேர்வு என்பது

ஜேஇஇ நுழைவு தேர்வு என்பது நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தகுதி பெறுவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும் .

இரு கட்டங்களாக நடைபெறும் தேர்வு

இந்த நுழைவு தேர்வனாது ஜேஇஇ முதல்நிலை (மெயின்), ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது

சுபம் குமார் முதல் மதிப்பெண்

இதில் பிகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த சுபம் குமார் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார் .மொத்த மதிப்பெண்ணான 360-க்கு இவர் 330 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார்

56,880 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி

ஜேஇஇ தேர்வினை 1,87,389 மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்த நிலையில், 1,79,694 மாணவர்கள் இரண்டுதாள்களையும் எழுதியிருந்த ந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது .அதன்படி, 56,880 மாணவர்கள் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளன்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண் தேர்வு அடிப்படையில் சேர்க்கை

குறிப்பாக ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவபவர்கள் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேர இயலும் , மேலும் முதல்நிலைத் தேர்வில் முதல் 2.50 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதியையும் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கபபட்டுள்ளது

அதோடுமட்டுமல்லாமல் , முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் இளநிலை பி.டெக். உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்ப படிப்பிகளில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியைப் பெறுபவர்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in