"தங்கமா? ரினியமா?” : மின்னுவதெல்லாம் பொன்னல்ல : தங்கத்தில் கலப்படம், அப்போ ஹால்மார்க், அதிரவைக்கும் தகவல்கள்...!

தங்கத்தோடு, ரினியம் என்ற உலோகம் கலந்து நகைகள் ஹால்மார்க் முத்திரையோடு விற்பனை செய்வது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
jewelry is being sold with a hallmark stamp, despite containing a mixture of gold and a metal called rhenium
jewelry is being sold with a hallmark stamp, despite containing a mixture of gold and a metal called rheniumsource:thamizhalai,ai generated
2 min read

நம்பிக்கை கொடுத்த ஹால்மார்க்

22 கேரட் ஆபரண் தங்க நகைகள ஹால்மார்க் முத்திரை இருந்தா கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கை இதுவரை இருந்திச்சு. ஆனா எந்த முத்திரையையும் தங்கம் உண்மையானது தான் என்பதை நிர்ணயிக்க முடியாது என்பதை சொல்ற விதமாக ஒரு கலப்படம் அரங்கேறி இருக்கு.

நகை தயாரிப்பாளர்கள் மோசடி

இதன் பின்னணியில நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஹால்மார்க் முத்திரை அளிக்கும் நிறுவனங்களிடையே நடக்கும் கூட்டுச் சதி தான் காரணம்.

தங்கத்தில் கலப்படும் ரினியம் தூள்

அதாவது, தங்கத்தில் ரினியம் தூள் கலந்து நகைகள் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுது. இந்த ரினியம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுதாம். ஒரு கிராம் ரினியத்தோட விலையா சுமார் ரூ.5 ஆயிரம்.

ராஜஸ்தானில் கலப்பட நகைகள் தயாரிப்பு

இந்தியாவில நகைகள் அதிகமா தயாரிக்கப்படுற தொழிற்சாலைகள் ராஜஸ்தானில் தான் இருக்கு. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில தான், தங்கத்துடன் ரேனியம் தூள் கலந்து நகைகள் தயாரிக்கப்படறது வெளிச்சத்துக்கு வந்து இருக்கு.

வெளிநாட்டு உலோகம் ரினியம்

ரினியம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகம் என்பதால், இதுவரை தடை செய்யப்பட்ட உலோகங்களின் பட்டியலில் சேர்க்கப்படவும் இல்லை.

ஆய்வகங்களாலும் கண்டுபிடிக்க முடியாது

எனவே, ஆய்வகக் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே, போலியான நகைகள் கூட, தூய்மையான தங்க நகை சோதனைகளின்போது காட்டிக்கொடுக்கப்படாமல், ஹால்மார்க் முத்திரையோடு நகைக் கடைகளை அலங்கரிக்கின்றன.

கடைகளுக்கு வரும் கலப்பட நகைகள்

எனவே, ரினியம் கலந்த தங்க நகைகள், அனைத்து சோதனைகளையும் தாண்டி விற்பனைக்கு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.

ஒரு கிராம் தங்கம், 7 கிராம் ரினியம்

ஒரு நகையில் எந்த அளவுக்கு ரேனியம் கலக்கப்படலாம் அப்படின்னு பார்த்தா, அதுவும் அதிர்ச்சி அளிக்கிற தகவலாதான் இருக்கு. ஒரு கிராம் தங்கத்துடன் 7 கிராம் ரினியம் தூளைக் கலக்கலாம்,

ஒரு சவரனில் தங்கம் வெறும் 1 கிராம்

இதோடு தங்க நகைகள் செய்ய கலக்கப்படும் 0.75 கிராம் செம்பு போன்ற உலோகத்தையும் சேர்த்து 8.75 கிராமுக்கு தங்க நகைகள் செய்யலாம். ஆனா, ஒரு சவரன் நகையில் இருப்பது வெறும் ஒரு கிராம் தங்கம், அப்படின்னும் போது, இந்த மோசடி நகை வாங்குவோரை எந்த அளவுக்கு பாதிக்கும் அப்படிங்கிறத புரிஞ்சுக்கலாம்.

ரினியம் கலப்பை கண்டறிய முடியாது

தங்கத்தோட கலப்படமாகி இருக்கிற ரினியத்தை எந்த பரிசோதனை இயந்திரமும் காட்டிக் கொடுக்காது. காட்டி கொடுக்கவும் தெரியாது. ஏன்னா அந்த இயந்திரங்களுக்கு ரினியம் என்ற உலோகம் பத்தின அறிமுகம் கிடையாது.

அண்மையில, மார்க் முத்திரை பெற்ற தங்க நகைகள் சோதனை செய்யப்பட்டதில், அதில் பெருமளவில் ரினியம் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.

இப்படி கலப்பட நகைகளை வாங்குவோருக்கு ஹால்மார்க் முத்திரை மீதான நம்பிக்கையும் தகர்ந்து போகும்.

நகை வாங்குவோருக்கு பெரிய இழப்பு

இது நகை வாங்குவோருக்கு எந்த அளவு சேதாரத்தை ஏற்படுத்தும் அப்படின்னு பார்த்தா, நகையில் இருப்பதோ சொற்ப தங்கம், மொத்த எடைக்கான தொகையை கொடுத்தாச்சு, இதுல போலி நகைக்கு செய்கூலி, சேதாரம் வேறு கொடுக்கப்பட்டு இருக்கு.

அப்படின்னா வாங்குற நகையோட எடையை பொருத்து, மக்கள் பல லட்சங்களை இழந்து இருக்காங்க.

சரி ரினியம் உலோகம் எதற்காக பயன்படுதுன்னு பார்ப்போம். இது ஒரு அரிய வகை உலோகம். இதன் அடர்த்தியும் தங்கத்தின் அடர்த்திக்கு இணையானது.

எனவே தங்கத்தோட ரினியத்தை கலக்கும்போது, பெரிய அளவில மாற்றம் ஏற்படுவது கிடையாது, தங்கம் நிறம் கூட மாறாது, எடை மட்டும் அதிகரிக்கும். ரினியத்தோட அடிப்படை நிறம் சாம்பல். இது தங்க நிற ரேனிய தூள்களாக வியாபாரிகளுக்கு வந்தடைஞ்சு, கனகச்சிதமா தங்கத்தோட சேர்ந்துடுது.

நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில கூட தங்க நகை தூய்மை சோதனைகளில் ரினியம் கலப்பை கண்டுபிடிக்க முடியாது அப்படிங்கிறது ஜீரணிக்க முடியாத தகவலா தான் இருக்கு.

உரைகல் சோதனை, அமிலச் சோதனைகள் போன்ற பாரம்பரிய முறைகளாலும் உள்ளே இருக்கும் கலப்படத்தை அறிய முடியாதாம்.

உருக்கினால் மட்டுமே உண்மை வெளியாகும்

சரி இந்த கலப்படம் எப்போ அம்பலப்பட்டு போகும் அப்படின்னு பார்த்தோம்ன்னா, தங்கத்தை தீயில் உருக்கும் போது தூய தங்கமும், ரினியமும் தனித்தனியா ஒதுங்கும்.

தங்கத்தின் உருகுநிலை 1,064°C, ஆனால் ரீனியத்தின் உருகுநிலை 3,186°C. தங்கத்தை உருக்கும்போது ரீனியம் உருகாமல் தனியாகப் பிரிந்து நின்றுவிடும்.

பொதுமக்களே எச்சரிக்கை அவசியம்

எனவே, தங்கம் விலை சரிஞ்சு போச்சு, இனி நிம்மதி அப்படின்னு நினைச்சு ஆசை ஆசையா நகை வாங்க கடைக்கு போனாலும், ரினியன் அப்படிங்கிற ஒரு போலி நம்மை பயமுறுத்துது.

இன்னிக்கு வாங்குற தங்கத்தை பல ஆண்டுகள் கழிச்சி, அதாவது 20 ஆண்டுகள் கூட ஆகலாம், அப்போ விற்க போனாலோ அல்லது வேறு நகையா மாத்த கடைக்கு கொண்டு போனாலோ நம்மோட நகையோட உண்மையான மதிப்பு தெரிய வந்து அதிர வைக்கும்.

'கோல்டு பவுடர்' என்ற பெயரில் புழங்கும் கலப்படப் பொருட்கள், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியச் சந்தைக்குள் நுழைவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம், தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

========================