

வளர்ச்சி பெற்ற பாஜக
வாஜ்பாய், அத்வானி தலைமை பதவிக்கு வந்த பிறகு, தேசிய அளவில் பாஜகவின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. வெறும் ஒரு உறுப்பினரோடு நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த பாஜக, 2014ல் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
மத்தியில் பாஜக ஆட்சி
வாஜ்பாய் தலைமையில் 5 ஆண்டுகள், நரேந்திர மோடி தலைமையில் 12 ஆண்டுகள், இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சிக்காலம் இருக்கிறது என்ற வகையில் இந்தியாவில் வலிமை வாய்ந்த கட்சியாக பாஜக கோலோச்சுக்கிறது.
பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக
உலகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியும் பாஜக தான். 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிப் பொறுப்பிலும் உள்ளது.
இந்தநிலையில், பாஜகவில் இருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய சில தலைவர்கள் பற்றி பார்ப்போம்...
கல்யாண் சிங்
1. உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் தொடக்க கால மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங், 1999ம் ஆண்டு,. பாஜகவில் இருந்து விலகி 'ராஷ்ட்ரிய கிராந்தி கட்சி' என்ற கட்சியைத் தொடங்கினார்.
உமா பாரதி
2. உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய பெண் தலைவரான உமா பாரதி, 2006ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி 'பாரதிய ஜனசக்தி கட்சி' என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார்.
தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கட்சியை கலைத்து விட்டு, பாஜகவில் மீண்டும் இணைந்தார்.
எடியூ,ரப்பா
2012ம் ஆண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உள்ளான நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாஜகவிலிருந்து விலகித் தனிக் கட்சியை தொடங்கினார்.
தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று பாஜகவின் வெற்றியைப் பெருமளவில் பாதித்தது.2014ம் ஆண்டு எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
விலகிய தலைவர்கள்
யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சத்ருகன் சின்ஹா, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி இருந்தாலும் தனிக்கட்சி எதையும் தொடங்கவில்லை.
தனி இயக்கம் கண்ட அண்ணாமலை
கல்யாண் சிங், உமா பாரதி, எடியூரப்பா வழியில் அண்ணாமலை தனி இயக்கம் கண்டிருக்கிறார். பாஜகவை பொருத்தவரை விலகியவர்கள் யாரும் தனிக்கட்சி தொடங்கினாலும், அரசியலிலும் சோபிக்க முடியவில்லை. வெற்றியையும் ஈட்ட முடியவில்லை.
இளைஞர்கள் பேராதரவு
இவர்களில் விதி விலக்காக இளைஞர்களின் ஆதரவோடு அண்ணாமலை களமிறங்கி இருக்கிறார். இனி வரும் தேர்தல்களில் போட்டியிட போவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
=================================