இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
என் அன்புள்ள நாட்டு மக்களே... இன்று ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலையுடன் ஒரு இந்தியனாக உங்களிடம் பேசுகிறேன். எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடல் வர்த்தக பாதைகள் முடக்கப்பட்டுள்ளன.
நமது சமையலறைக்கும், வீடுகளுக்கும் தேவையான எரிசக்தி, நமது வயல்களையும் பயிர்களையும் வளர்க்கும் உரங்கள், நமது தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் இயக்கும் எரிபொருள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. என்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்
எரிசக்தி சேமிப்பு குறித்து பேசியதாவது
இதற்கு பதிலடியாக, 60க்கும் மேற்பட்ட நாடுகள் எரிபொருட்கள் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விதிகளை அமல்படுத்தியுள்ளன. சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் தம் மக்களை கடினமான காலங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் நாம் மிகப் பெரிய நாடு. நமது பிரதமர் அடுத்த ஒரு வருடத்தில் எரிசக்தியை சேமிக்கும்படி நம்மை கேட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
நிலக்கரி எரிவாயு மாற்றம், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி ஆகியவற்றில் சமீபத்திய முதலீடுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக் கூடாது.
அரசுகளும் இதில் பங்கு வகிக்க வேண்டும்.
எனவே பிரதமரை அனைத்து முதலமைச்சர்களுடனும் தேசிய உச்சி மாநாடு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்
எரிபொருள் சேமிப்பு குறித்து பேசிய
பெட்ரோல், டீசலில் உள்ள VAT உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும். ரயில், மெட்ரோ, பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும். இதனால் மக்கள் தனியார் வாகனங்களை விட்டு பொதுப் போக்குவரத்துக்கு மாறலாம்.
இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை இந்தியாவை வலுப்படுத்தும். சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எண்ணெயும் ஏழை இந்தியரை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கும். இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொண்டால், இந்தியா வலுவாக வெளிவரும். இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
====================