தனிநபர் வருமானம், முதலிடத்தில் கர்நாடகா : 2ம் இடத்தில் தமிழ்நாடு

State Wise Per Capita Income List 2025 in India : இந்திய அளவில் தனிநபர் வருமானத்தில் கர்நாடகா முதலிடத்தையும், தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்து இருக்கின்றன.
Per Capita Income Of Tamil Nadu 2025
Per Capita Income Of Tamil Nadu 2025
1 min read

தனிநபர் வருமானம் - அரசு விளக்கம் :

State Wise Per Capita Income List 2025 in India : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீகாரை சேர்ந்த எம்பிக்கள் தனிநபர் வருமானம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ”2024 - 25ம் ஆண்டுக்கான தனிநபர் நிகர தேசிய வருமானம் 1,14,710 ரூபாயாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் நிகர தேசிய வருமானம் 72,805 ரூபாயாக இருந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் வருமான முதலிடத்தில் கர்நாடகா :

பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார்ந்த அமைப்பு, நிர்வாக வழிமுறைகள் மற்றும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே தனிநபர் வருமானம் மாறுபடுகிறது. அந்த வகையில் நாட்டிலேயே தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம்(Karnataka Per Capita Income 2025) திகழ்கிறது அங்கு 2024- 2025 ஆம் ஆண்டு தனிநபர் வருமானம் 2,04,605 ரூபாயாக உள்ளது.

மேலும் படிக்க : ”யுபிஐ” பணப்பரிவர்த்தனை இந்தியா "டாப்" : சர்வதேச நிதியம் பாராட்டு

தனிநபர் வருமானம் 2ம் இடத்தில் தமிழ்நாடு :

தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது(Per Capita Income Of Tamil Nadu 2025). இங்கு தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 96,309 ரூபாயாக உள்ளது.தமிழகத்தின் தனிநபர் வருமானம்(GDP Of Tamil Nadu) கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தை விட அதிகமாக இருந்தது மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வகையில், 2022-23, 2023-24 ஆகிய இரண்டுஆண்டுகளில் தமிழக தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்கு அதிகமாக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மகாராஷ்டிரா (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) மாநிலங்கள் உள்ளன.

---

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in