”தண்ணீர் தர முடியாது” : ’முதல்வர் விஜய் வர வேண்டாம்’: காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு : D.K. சிவக்குமார்.!

தமிழகத்திufhd காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது, காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து மேற்முறையீடு செய்யப் போவதாக, கர்நாடக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Karnataka CM Shivakumar stated  not possible to release Cauvery water for Tamil Nadu
Karnataka CM Shivakumar stated not possible to release Cauvery water for Tamil NaduAI generated
1 min read

தமிழகத்துக்கு கிடைக்காத காவிரி நீர்

தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டதால், காவிரி நீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தமிழகத்துக்கு தர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் தர மறுத்து வருகிறது.

இதனால், டெல்டாவில் குறுவை சாகுபடி தடைபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரை கொண்டு ஒரு சில இடங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தண்ணீர் திறக்க முடியாது என்று கைவிரித்து விட்டது.

காவிரி மேலாண்மை வாரியக் கூட்டம்

இந்தநிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், உரிய தண்ணீரை திறந்து விடுமாறு தமிழகம் கோரிக்கை விடுத்தது.

15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

இதை பரிசீலித்த வாரியம், ஒழுங்காற்று குழு அறிவித்ததை போலவே, தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்தது.

காவிரி ஆணைய உத்தரவு குறித்து பெங்களூருவில் முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் உயர்நிலைக் குழு விவாதித்தது.

ஆணைய உத்தரவை எடுத்து மேல்முறையீடு

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சிவக்குமார்,

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியாது

தமிழ்நாட்டுக்கு 4.5 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. கபினி அணை 83 சதவீதம் நிறைந்துள்ளது; கே.ஆர்.எஸ். அணையில் 36 சதவீதம் நீர் உள்ளது. ஹேரங்கி அணையில் 95 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட தயாராக இல்லை என காவிரி மேலாண்மை ஆணையத்தில் கூறிவிட்டோம். கர்நாடகாவால் ஏன் தண்ணீர் திறக்க இயலவில்லை என்பதை தீர்ப்பாயத்திடம் எடுத்துரைத்து விட்டோம்.

2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

மத்திய அரசு, தமிழ்நாடு அரசு வாரிய அதிகாரிகள் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் மேல்முறையீடு செய்வதற்கு முன்பாக அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடமும் கர்நாடகத்தின் நிலைமையை எடுத்துரைத்து இருக்கிறோம்.

முதல்வர் விஜய் வரவேண்டாம்

முதல்வர் விஜய் ஆகஸ்டு 3ம் தேதி வர இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், கர்நாடகாவில் பதற்றமான சூழல் இருப்பதால், அவர் இப்போதைக்கு வர வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. சுமூகமான சூழல் உருவாகும் போது, நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவோம்” இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேட்டியளித்தார்.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in