
கையப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் :
Karnataka CM Siddaramaiah on Devanahalli Land Issue : வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை கைப்பற்றி, அவற்றை தொழிற்சாலைகளாக மாற்றுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்காக(Parandur Airport) திமுக அரசு விவசாய நிலங்களை அபகரிப்பது போன்று, கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், 1,777 ஏக்கர் விளை நிலங்களை தாரை வார்க்க திட்டமிட்டது.
விண்வெளி பூங்கா திட்டம் :
பெங்களூருவின் புறநகர் பகுதியான தேவனஹள்ளி தாலுகாவில் விண்வெளி பூங்கா அமைக்க திட்டமிட்ட முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, அதற்காக விளை நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்தது. மொத்தம் 1,777 ஏக்கர் நிலம் இந்தத் திட்டத்திற்கு தேவைப்பட்டது. அருமையான விளை நிலங்களை இழக்க விரும்பாத விவசாயிகள், காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
கடும் எதிர்ப்பு பின்வாங்கிய காங்கிரஸ் அரசு :
மூன்றரை ஆண்டுகளாக போராடி வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு திட்டத்தை கைவிடுவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த்தும் விவசாயிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களை முன்னெடுத்த விவசாயிகள், காங்கிரஸ் அரசுக்கு தலைவலியாக மாறினர். அவர்களுக்கு மக்கள் ஆதரவும் பெருகியதால், சித்தராமையா அரசு செய்வதறியாமல் திகைத்தது.
நில எடுப்பை கைவிட்டார் சித்தராமையா :
முதல்வர் சித்தராமையாக தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது என்பதால், விண்வெளி திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது என்று இந்தக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தில் இறங்கினால் மாற்றம் நிச்சயம், எந்த அரசாக இருந்தாலும் பணிந்து போக வேண்டும் என்பதை, கர்நாடக விவசாயிகள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்
====