மேகேதாட்டு அணைக்காக 9 லட்சம் மரங்கள் அழிப்பு : கர்நாடகாவின் முடிவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி..!

அணைக்காக மரங்கள் அழிக்கப்படுவதற்கு, சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Karnataka Government Says Nearly 9 Lakh Trees May Be Felled for Mekedatu Dam Project; Public Shocked...
Karnataka Government Says Nearly 9 Lakh Trees May Be Felled for Mekedatu Dam Project; Public Shocked...Ai Generated
1 min read

மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கும் மேகேதாட்டு திட்டம்:

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகேதாட்டு அணைத் திட்டம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திட்டத்திற்காக சுமார் 9 லட்சம் மரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, 66.8 டிஎம்சி அளவிலான நீரை சேமிப்பது மற்றும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் அனுப்பப்பட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது :

மேகேதாட்டு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது.

ஆனால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாகக் கூறி அந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.

9 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என மதிப்பீடு :

திட்டப் பகுதிக்குள் காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. அணை, நீர்த்தேக்கம், சாலைகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளுக்காக மிகப்பெரிய அளவில் வனப்பகுதி பாதிக்கப்படலாம் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரிக்கின்றன.

அதுமட்டும்மல்லாமல் இதற்காக சுமார் ஏறக்குறைய லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் என தகவல் வெளி வந்து இருக்கிறது .

தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு :

ஆரம்பகாலத்தில் இருந்ததே இந்த திட்டத்துக்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வந்து கொண்டிருந்தது அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளும் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த சூழ்நிலையில் சட்ட நடவடிக்கைகளும் சென்றுகொண்டுருக்கின்றன .

மேலும், விவசாய சங்கங்களும் இந்தத் திட்டத்திற்கு எதிராக பலமுறை குரல் கொடுத்துள்ளன.

சுற்றுச்சூழலா? வளர்ச்சியா?

ஒருபுறம் பெங்களூருவின் எதிர்கால குடிநீர் பாதுகாப்புக்கு இந்தத் திட்டம் அவசியம் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

மறுபுறம், லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது, வனவிலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படுவது மற்றும் காவிரி நீர்ப் பங்கீட்டில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகள் எடுக்கும் அடுத்தகட்ட முடிவுகள், மேகதாது திட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in