கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல் : 296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்புமனு தாக்கல் : நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்!

2026 Assembly Election : ஏப்ரல் 9 தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அதற்கான இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியாகிறது
Kerala, Assam,Puducherry Assembly elections 3,600 candidates file nominations 296 constituencies Final list tomorrow
Kerala, Assam,Puducherry Assembly elections 3,600 candidates file nominations 296 constituencies Final list tomorrow google
1 min read

2026 சட்டமன்ற தேர்தல் ; இறுதி வேட்பாளர் பட்டியல்

2026 Assembly Election : கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 9 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது .அதன்படி இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியாகிறது

296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்பு மனுக்கள்

296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.அதன்படி நாளை இருந்து வேட்பாளர்களில்ன் பட்டியலானது வெளியாகிறது

கேரளா இறுதி வேட்பாளர்கள்

கேரளா மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கு மொத்தம் 1,254 வேட்பாளர்கள் 2,125 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற பரிசீலனையின் முடிவில் 1,637 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 337 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அசாம் மாநிலம் ,பரிசீலனையில் மனுக்கள்

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கும் 1,110 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை இன்றும் பரிசீலனையில் உள்ளன.

புதுச்சேரி ; 3,600 மனுக்கள் தாக்கல்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் 350 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 3 மாநிலங்களிலும் 3,600க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகி உள்ளதால், அந்த மனுக்கள் இன்றும் பரிசீலனையில் உள்ளது .

வாக்குப்பதிவுக்கு பிந்தைய முடிவுக்கு தடை

வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை நாடு முழுவதும் ‘எக்ஸிட்’ போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in