கேரளா : "15ம் தேதி முதல் அமலுக்கு வரும் மகளிர் இலவச பேருந்து பயணம்" : முதல்வர் சதீஷன் அறிவிப்பு!

கேரளாவில் வருகிற ஜூன் 15-ம் தேதி முதல் அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்
Kerala: Free bus travel for women to come into effect from the 15th; Chief Minister Satheesan announces.
Kerala: Free bus travel for women to come into effect from the 15th; Chief Minister Satheesan announces. google
1 min read

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஐக்கிய ஜனநாய முன்னணி கட்சி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாய முன்னணி கட்சியானது ஆட்சியை கைப்பற்றினால கேரளாவில் அனைத்து மகளிரும் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது .

தேர்தல் இறுதி முடிவுகளில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் , இந்த வாக்குறுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி தற்போது நிறைவேற்றியுள்ளது

15-ம் தேதி முதல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்

வருகிற 15 ம் தேதி முதல் கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் , மகளிர் அனைவரும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று முத்ல்வர் சதீஷன் தெரிவித்துள்ளார்

இது குறித்து முதல்வர் கூறியிருப்பதாவது

கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) அரசு ஏற்கெனவே ஆண்டுக்கு ரூ.1,500 கோடி நிதி அளிக்கிறது.

தற்போது பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் அமல்படுத்தப்படுவதால் மாதத்துக்கு ரூ.70 கோடி செலவாகும். இதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.800 கோடி மானியம் வழங்கப்படடும் என்றும்

சாதாரண பேருந்துகளில் மட்டும் பொருந்தும்

இந்த் திட்டம் அமலான 6 மாதங்களில், கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரிக்கும். முதல் கட்டமாக இலவச பயணம் சாதாரண பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இவற்றில் பெண்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் இலவசமாக பயணிக்கலாம்.

படிப்படியாக இந்த திட்டமானது அமல்படுத்தப்ப்ட்டு அடித்த கட்ட நகர்வுக்கு விரிவுப்படுத்தபடும் என்றூம் முதல்வர் சதீஷன் தெரிவித்துள்ளார்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in