கேரளாவில் ஜூன் 15 முதல் பெண்களுக்கு இலவச பயணம்; ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு , முதல்வர் அதிரடி!

கேரள முதல்வராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Kerala: Free travel for women from June 15, salary hike for ASHA workers, CM takes action
Kerala: Free travel for women from June 15, salary hike for ASHA workers, CM takes action google
1 min read

முதல்வராக பதவியேற்ற வி.டி.சதீசன்

நடந்து முடிந்த சட்டப்பேரவி தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றுக்கொண்டார் . ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

பெண்களுக்கு இலவச பேருந்து : முதல் கையெழுத்து

கேரளாவின் முதல்வாரக புதிதாக பங்கேற்றுள்ள வி.டி.சதீசன் தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்திற்கான திட்டதிற்கு முதல் கையெழுத்தை இட்டுருக்கிறார்.

பெண்களுக்கு இலவச பேருந்து :ஜூன் 15 முதல் அமல்

தேர்தலின்போது நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 2 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒன்று, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்.

அதனை வரும் ஜூன் 15-ம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்

வயதானவரகளுக்காக தனி துறை

இரண்டாவது திட்டமாக .,வயதானவர்களுக்காக தனி துறையை நாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார் .இந்தியாவில் இது முதலாவதாக இருக்கும். வயதானவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு நாகரிக சமூகத்தின் முக்கிய அளவுகோல் என்றும் இதை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த நாகரிக சமூகமாக கேரளாவை மாற்ற நாங்கள் கனவு காண்கிறோம்.

வயதானவர்களின் நலன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். இதற்காக தனி துறையை நாங்கள் ஏற்படுத்த இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்

ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு கோரி ஆஷா பணியாளர்கள் நீண்டகாலமாக போராடினார்கள். அப்போது நாங்கள், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தோம்.

அதன்படி, தற்போது அவர்களுக்கான மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்படுள்ளது ,மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளிகளில் சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000, ப்ரீ-ஸ்கூல் ஆசிரியர்களுக்கு ரூ.1,000, ஆயாக்களுக்கு ரூ.1,000 மாத ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in