”முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து” : இந்தியா-ஜப்பான் பிரதமர்கள் பேச்சுவார்த்தை : ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை...!

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Key agreements were signed during the constructive talks held between the Prime Ministers of India and Japan.
Key agreements were signed during the constructive talks held between the Prime Ministers of India and Japan.AI generated
2 min read

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள்

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் மோடியும் அவரும் பங்கேற்ற இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின.

பிரதமர்கள் பேச்சுவார்த்தை

ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் அதி​காரப்​பூர்​வ​மாக சந்​தித்​துப் பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜப்பான் அரசுக்கு மோடி நன்றி

இந்​தி​யா​வின் ஆட்டோ மொபைல், மின்​னணு துறை வளர்ச்​சிக்கு ஜப்​பான் முக்​கிய பங்​களிப்​பு​களை வழங்கி உள்​ளது. தற்​போது ஏஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பத்​தில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.

பாது​காப்பு தொடர்​பாக முக்​கிய ஒப்​பந்தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதுதவிர, மருந்து உற்​பத்​தி, மருத்​துவ உபகரணங்​கள், உயிரி தொழில்​நுட்​பம், நிதிச் சேவை தொடர்​பாக​வும் முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

இந்​தி​யா- ஜப்​பான் பயோ காஸ் திட்​டத்​தின்​கீழ் நாடு முழு​வதும் புதி​தாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்​சாலைகள் கட்​டப்​படும். இதன்​மூலம் இந்​திய கிராமங்​கள் வளர்ச்சி அடை​யும்.

நல்லுறவு மேலும் வலுப்பெறும்

இந்தி​யா​வில் கச்சா எண்​ணெய் கையிருப்பை அதி​கரிக்​கத் தேவையான தொழில்​நுட்ப உதவி​களை வழங்க ஜப்​பான் முன்​வந்​துள்​ளது.

பேட்​டரி, பசுமை ஹைட்​ரஜன், அணுசக்தி, கப்​பல் கட்​டு​மானம், விமான போக்​கு​வரத்​து, சரக்கு போக்​கு​வரத்து உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​கள் இணைந்து பணி​யாற்​றும்.

ஜப்பான் பிரதமர் உறுதி

இந்​தி​யா​வின் பெட்​ரோலிய கையிருப்பை அதி​கரிக்க தேவை​யான தொழில்​நுட்ப உதவி​களை ஜப்​பான் வழங்​கும். எரிசக்​தி, அரிய​வகை கனிமங்​கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்​படும்.

ஜப்​பான் - இந்​திய கடற்​படைகள் இணைந்து விரை​வில் போர்ப் பயிற்​சிகளில் ஈடு​படும். இரு நாடு​களும் இணைந்து ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யும்.

இரு நாடு​கள் இடையே கையெழுத்தான பாது​காப்பு ஒப்​பந்தத்தின்​படி, ‘இந்​தி​யா​வில் தயாரிப்​போம்’ திட்​டத்​தின்​கீழ் போர்க் ​கப்​பல்​களுக்கு தேவை​யான சிறப்பு ஆன்டெ​னாக்​கள் தயாரிக்​கப்பட உள்​ளன.

இதன்​மூலம் எதிரி​களின் ரேடார்​களால் இந்​திய, ஜப்​பானிய போர்க் கப்​பல்​களை கண்​டுபிடிக்க முடி​யாது. வரும் காலத்தில் இணைந்து போர்க்கப்​பல்​கள் தயாரிக்​க​வும் கொள்​கைரீ​தி​யில் உடன்​பாடு எட்​டப்​பட்​டுள்​ள​தாக ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்​சி தெரிவித்தார்.

35,000 கோடியில் கார் தொழிற்சாலை

ஹரி​யா​னா​வின்​ கார்​கோ​டா​வில்​ ரூ.35,000 கோடி முதலீட்​டில்​ மாருதி சுசூகி நிறு​வனத்​தின்​ கார்​ உற்​பத்​தி தொழிற்​சாலை கட்​டப்​பட்​டுள்​ளது.

பிரதமர்​ மோடி​யும்​, ஜப்​பான்​ பிரதமர்​ சனே டகாய்ச்​சி​யும்​ இணைந்து காணொலி வாயி​லாக கார்​ தொழிற்​சாலையை தொடங்கி வைத்​தனர்​.

5 லட்சம் கார்கள் தயாரிப்பு

800 ஏக்​கரில் அமைந்​துள்​ள இந்​த ஆலை உலகின்​ மிகப்​பெரிய கார்​ தொழிற்​சாலைகளில்​ ஒன்​றாகும்​. முதல்​கட்​ட​மாக, இங்கு ஆண்​டுக்​கு 5 லட்​சம்​ கார்​கள்​ உற்​பத்​தி செய்​யப்​படும். பின்​னர்​ படிப்​படி​யாக இது 10 லட்சம்​ வரை அதி​கரிக்​கப்​பட உள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

‘‘மும்பை - அகமதாபாத் இடையே 2027ல் புல்லட் ரயில் சேவையைதொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான இ-10 ஷிங்கன்சென் அறிமுகம் செய்யப்படும்’’.

புல்லட் ரயில்கள் மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன்மூலம் மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் சென்றடையலாம்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in