”அரசியல் தலைவர்கள் கைது” : ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம், டெல்லியில் உச்சகட்ட பதற்றம் : மெட்ரோ நிலையங்கள் மூடல்..!

ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Key political leaders who staged a protest in Delhi against Gyanesh Kumar were arrested.
Key political leaders who staged a protest in Delhi against Gyanesh Kumar were arrested.google
1 min read

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த சி.ஜே.பி அனுமதி கோரிய நிலையில், காவல்துறை அக்டோபர் 9-ந் தேதி இந்த அனுமதியை நிராகரித்தது.

தடையை மீறி சிஜேபி போராட்டம்

ஆனாலும், தடையை மீறி போராட்டம் முன்னெடுக்கப்படுவதால், டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். உச்சக்பட்ட பதற்றமானது நிலவுகிறது.

டெல்லியில் தடை உத்தரவு

மத்திய டெல்லி முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

விடுதிகளில் தீவிர கண்காணிப்பு

மத்திய டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் பிற தங்கும் வசதிகளைக் கொண்ட இடங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு புதிய முன்பதிவுகளைக் கட்டுப்படுத்தவோ அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

23,000 வீரர்கள் அனுப்பி வைப்பு

அமைதியை நிலைநாட்ட டெல்லிக்கு கூடுதலாக சுமார் 23 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து சிஆர்பிஎஃப் (CRPF) படைகள் திரட்டப்பட்டு வருகின்றன.

சிஜேபி முன்னெடுத்து போராட்டத்தால் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பல பகுதிகளில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜய், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகிகள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in