டெல்லி, செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் : லஷ்கர் இ-தொய்பா சதி, உளவுத்துறை எச்சரிக்கை

Delhi Bomb Blast Threat : டெல்லி, செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Intelligence agencies warned Lashkar-e-Taiba terrorist organization is planning to carry out bomb blasts in Delhi
Intelligence agencies warned Lashkar-e-Taiba terrorist organization is planning to carry out bomb blasts in Delhi Source : Google
1 min read

மசூதியில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி

High Alert in Delhi : Pakistan's Lashkar-e-Taiba plotting massive blast near Red Fort, Delhi Bomb Blast Threat : பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6ம் தேதி நடந்த மசூதி குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்த லஷ்கர் சதி

இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், இந்தியாவில் முக்கியமான கோவில்களை குறிவைத்து ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோவில்கள் இலக்காக இருக்கலாம்

அதன்படி, தலைநகர் டெல்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களை தீவிரவாதிகள் இலக்குகளாக இருக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்தப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்பு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால், பழைய டெல்லி, சாந்தினி சவுக், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பொதுமக்களும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம், பொருட்கள் குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in