மலையாளத்தில் "முதன்முறையாக 300 கோடி" : வசூலில் மிரட்டும் ‘லோகா’

Lokah Chapter 1: Chandra Worldwide Box Office Collection : கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான ‘லோகா’ திரைப்படம் 300 கோடி வசூலை குவித்து, மலையாள திரையுலகை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Lokah Chapter 1: Chandra Worldwide Box Office Collection
Lokah Chapter 1: Chandra Worldwide Box Office Collection
1 min read

’லோகா’ திரைப்படம் பெரும் வரவேற்பு

Lokah Chapter 1: Chandra Worldwide Box Office Collection : துல்கர் சல்மான் தயரிப்பில் ஆகஸ்டு மாதம் ‘லோகா’ திரைப்படம் வெளியானது. பெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘லோகா’ வில், டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வில்லனாக நடன இயக்குநர் சாண்டி

நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

தீபாவளி முதல் ஓ்டிடி தளத்தில்...

தியேட்டர்களில் ஹிட் கொடுத்த லோகாபடத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற 20ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

300 கோடிக்கு மேல் வசூல்

அதன்படி, ‘லோகா’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவில் இதுவரை எந்தப் படமும் 300 கோடி அளவுக்கு வசூலை குவித்தது கிடையாது. இதன்மூலம் லோகா புதிய சாதனை படைத்து இருக்கிறது.

மேலும் படிக்க : Kantara : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா சாப்டர் 1! இவ்வளவு கோடியா?

கல்யாணி பிரியதர்ஷன் சாதனை

மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படைத்துள்ளது. இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகையும் சோலோ ஹீரோயினாக இவ்வளவு வசூல் ஈட்டிய திரைப்படத்தைக் கொடுக்கவில்லை. அதனை கொடுத்த ஒரே நடிகையாக கல்யாணி பிரியதர்ஷன் கொண்டாடப்பட்டு வருகிறார்.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in