எல்பிஜி சிலிண்டர் மானியம் பெற புதிய கட்டுப்பாடு: அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் இணைப்பு கட்டாயம்!

LPG Subsidy New Rules: எல்பிஜி சிலிண்டர் மானியம் பெற அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
LPG Subsidy New Rules
LPG Subsidy New Rulessource:thamizhalai,ai generated
1 min read

LPG Cylinder Subsidy New Rules: Biometric Aadhaar Verification Mandatory

அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடு

மத்திய அரசு சார்பில் விநியோகிக்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் சுமார் 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சிலர் ஒரே சமயத்தில் பல கேஸ் இணைப்புகளைப் பெற்று கூடுதல் மானியம் பெறுவதைத் தடுக்க, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பயோமெட்ரிக் ஆதார் இணைப்பு கட்டாயம்

மானிய விலையில் சிலிண்டர் பெறும் நுகர்வோர்கள் அனைவரும் தங்களது எல்பிஜி இணைப்புடன் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த சரிபார்ப்பை செய்யாவிட்டால் இனி மானியம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

89.9 சதவீதம் பேருக்கு சரிபார்ப்பு நிறைவு

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19-ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 27.43 கோடி இணைப்புகளில் ஆதார் சரிபார்ப்பு முடிவடைந்துள்ளது. இது மொத்த எல்.பி.ஜி. நுகர்வோரில் 89.9 சதவீதம் ஆகும்.

ஆதார் இணைப்பு செய்யும் எளிய வழிகள்

கேஸ் இணைப்பில் ஆதாரை சரிபார்க்கப் பல்வேறு எளிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலிண்டரை வீட்டிற்கு விநியோகிக்க வரும் ஊழியரின் மொபைல் செயலி மூலமாகவோ அல்லது நேரடியாகச் சிலிண்டர் விநியோக அலுவலகத்திற்கு சென்றோ ஆதாரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மொபைல் செயலி மற்றும் இணையதள வசதி

இதுதவிர, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாகவும், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் நுகர்வோர்கள் தங்களது ஆதார் இணைப்பை சுலபமாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க : "வெற்றிப் பயணம், 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை” : Express to Mofussil : 85 லட்சம் பேர் பயணம்..!

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in