"வெற்றிப் பயணம், 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை” : Express to Mofussil : 85 லட்சம் பேர் பயணம்..!

வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம் மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் சுமார் 12,692 பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பயணச் சேவையின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
 'Vetri Payanam' scheme, 12,692 buses operating in metropolitan,urban free travel service for women
'Vetri Payanam' scheme, 12,692 buses operating in metropolitan,urban free travel service for women
1 min read

தவெக அளித்த தேர்தல் வாக்குறுதி

திமுக ஆட்சிக் காலத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சேவைகொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தவெக அரசின் ”வெற்றிப் பயணம்” திட்டம்

அந்த வகையில், மகளிருக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ்...

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டு...

அக்டோபர் 2 முதல் அமலுக்கு வருகிறது

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம்

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர்.

"வெற்றிப் பயணம்" திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் (Mofussil Ordinary)...

மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) சாதாரணப் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

12,692 பேருந்துகளில் பெண்கள் பயணிக்கலாம்

இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும்.

85 லட்சம் மகளிர் பயன்பெறுவர்

நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். மேலும், "வெற்றிப் பயணம்" பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது.

சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் 25.09.2026-க்குள்ளும், சோதனை ஓட்டம் 27.09.2026 அன்றும் மேற்கொள்ளப்படும்.

அக். 2 முதல் வெற்றிப் பயணம்

"வெற்றிப் பயணம்" திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2.10.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.

மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள் பயன்

மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

===

logo
Thamizh Alai
www.thamizhalai.in