நீடித்து வரும் போர் :எரிபொருள் தட்டுப்பாடு
தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது .முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரினை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது .
இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து எல்பிஜி வருவதில் கடுமையான தடையானது ஏற்பட்டுள்ளது
பதற்றத்தால் மக்கள்
இதனால் கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் , வீட்டு உபயோக சிலிண்டருக்கான புக்கிங்கை அதிக அளவில் செய்யத் தொடங்கினர்.
போன் மூலம் அதிக அளவில் புக்கிங் செய்யப்படுவதால் அந்த சிஸ்டம் செயலிழந்த நிலையில் எல்பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்
எல்பிஜி உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது
இந்த எரிவாயு குறித்த தேவையற்ற வதந்தியால் மக்கள்பெரும் பதற்ற நிலைக்கு ஆளாகி வருகின்றனர் .இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,எல்பிஜி சிலிண்டர் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க :தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது
வழக்கமாக தினந்தோறும் நாடு முழுவதும் 55.7 லட்சம் பேர் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்வார்கள். சிலிண்டர் கிடைக்காது என்று கருதி, கடந்த சில நாட்களாக 75.7 லட்சம் பேர் சிலிண்டருக்காக புக்கிங் செய்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் . இதற்காக எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்துள்ளோம். எனவே, சிலிண்டர் கிடைக்காது என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது