எரிபொருள் தட்டுப்பாடு
Fuel Shortage in Chennai : தொடரும் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்குதலால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதளவில் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர போவதாகவும் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும் எழுந்த வதந்திகளை அடுத்து தமிழகம் முழுவவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களால் பொதுமக்கள் குவிந்த வண்ணம் வருகின்றனர்.
90 நாட்களுக்கு இருப்பு
நாடு முழுவதும் அடுத்த 90நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாகவும் , சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளிலும் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் எண்ணெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவைக்கு அதிகமான எரிபொருட்களை வாங்க வேண்டாம்
மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் அதனால் செயற்கை தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும், கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்குவது மிகவும் ஆபத்தானது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் உள்ள 14 முனையங்களில் 21 நாட்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : தேவையற்ற அச்சத்தால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள் : வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு!
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இதனால், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எண்ணெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதற்றம் அடைய வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தொடரும் இந்த எரிபொருள் சம்பந்தப்பட்ட வந்தந்திகளை அடுத்து முதல்வர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அ
தன்படி மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, 2 நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்