தயார் நிலையில் ”பாகுபலி ராக்கெட்”: CMS-03 செயற்கைக்கோளுடன் பயணம்

ISRO To Launch CMS 03 India's Heaviest Communication Satellite : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ் செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்.
LVM 3 rocket will launch tomorrow from Sriharikota with CMS satellite
LVM 3 rocket will launch tomorrow from Sriharikota with CMS satellitehttps://x.com/isro?ref_
1 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

ISRO To Launch CMS 03 India's Heaviest Communication Satellite : விண்வெளியில் ராக்கெட்டுகளை செலுத்துவது, செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக அனுப்புவதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிபுணத்துவம் பெற்று திகழ்கிறது. நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த இஸ்ரோ அடுத்து செவ்வாய் கிரக ஆய்விலும் கவனம் செலுத்தி வருகிறது. விண்வெளியில் இந்திய மையத்தை அமைப்பது, விண்வெளிக்கு இந்தியரை அனுப்புவது இஸ்ரோவின் சாதனைகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன.

ராணுவத்திற்கான ‘சி.எம்.எஸ்-03’ செயற்கைகோள்

இந்தநிலையில், இந்திய ராணுவத்திற்காக சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சி.எம்.எஸ்-03’ என்று அழைக்கப்படும் அந்த செயற்கைக்கோள், சந்திரயான் 3 விண்ணில் செலுத்திய எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

பாகுபலி ராக்கெட்

4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் எல்விஎம் 3 ராக்கெட் ஏந்திச் செல்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பயணம்

இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த திட்டத்திற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது.

முக்கியமான செயற்கைக்கோள்

இந்த திட்டம் வெற்றி அடைய, திருப்பதி கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், ” நாளை எல்விஎம் 3- எம்5 ராக்கெட் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை ஏவ இலக்கு வைத்துள்ளோம். சிஎம்எஸ்-03 ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது மிக முக்கியமான செயற்கைக்கோளாக இருக்கும். தகவல்களை சேகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ய்ய என்றார்.

ராக்கெட் பெயர் - எல்விஎம்3- எம்5

செயற்கைக்கோள் - சிஎம்எஸ்-03, மல்டி பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

எடை - செயற்கைக்கோள், எரிபொருள் உட்பட மொத்தம் 642 டன்.

பிஎஸ்எல்வி- ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களை விட, அதிக எடையை சுமந்தும் செல்லும் திறன் கொண்டது

செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

பூமியில் இருந்து புறப்பட்ட, 16 வது நிமிடத்தில் செயற்கைக்கோளை 179 கி.மீ., உயரம் உள்ள புவி ஒத்திசைவு சுற்று பாதையில் ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தம் செய்யும்

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in