சஞ்சய் காந்தி to அஜித் பவார்: விமான விபத்துகளில் இறந்த தலைவர்கள்

Ajit Pawar Plane Crash in Tamil : பாரமதியில் நேரிட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் விமான விபத்துகளில் உயிரிழந்த பிரமுகர்கள் குறித்து பார்ப்போம்.
Maharashtra Deputy CM Ajit Pawar death in a plane crash, let's take a look celebrities who  died in plane crashes
Maharashtra Deputy CM Ajit Pawar death in a plane crash, let's take a look celebrities who died in plane crashesSource : Google
1 min read

விமான விபத்து - அஜித் பவார் மரணம்

Ajit Pawar Plane Crash in Tamil : மகாராஷ்டிர மாநிலம் பாரமதி. மும்பையில் இருந்து பறந்து வந்த சிறிய ரக விமானம், தரையிறங்கும் தருவாயில் திடீரென நிலை தடுமாறி தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் சென்ற 5 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவை உலுக்கிய இந்த விபத்து குறித்து, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் அஜித் பவார் மட்டுமின்றி, பல அரசியல் தலைவர்கள் விமான விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அந்த விவரங்களை பார்க்கலாம்.

சஞ்சய் காந்தி மரணம்

1980 ம் ஆண்டு ஜூன் 23-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சஞ்சய் காந்தி, டெல்லியில் சிறிய ரக விமானத்தை ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

மாதவ் ராவ் சிந்தியா உயிரிழப்பு

2001ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான மாதவ் ராவ் சிந்தியா, உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஜிஎம்சி பாலயோகி மரணம்

2002ல் மக்களவை சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி. பாலயோகி, ஆந்திர பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ராஜசேகர ரெட்டி மரணம்

2009ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, சித்தூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டபோது நல்லமலா வனப்பகுதியில் அவரது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பல மணிநேரத் தேடலுக்குப் பிறகே அவர் உயிரிழந்த செய்தி உறுதி செய்யப்பட்டது.

டோர்ஜி காண்டு மரணம்

2011ல் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி உயிரிழந்தார்.

ஜெனரல் பிபின் ராவத் உயிரிழப்பு

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in