
Mahua Moitra Criticize Amit Shah : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்ட வேண்டும் என்று மகுவா மொய்த்ரா கூறியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் அசாம் சட்டப்பேரவை துணைத்தலைவரும் பாஜக தலைவருமான நுமல் மோமின்Numal Momin . அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
மகுவா மொய்த்ராவிடமிருந்து இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர் கலாச்சாரமற்ற, ரோஹிங்கிய மற்றும் வங்கதேச முஸ்லிம் ஊடுருவல் ஆதரவு கட்சியைச் சேர்ந்தவர். அவர்களது கட்சி இந்திய கலாச்சாரத்தை அழித்து வருகிறது. அவர்களின் முக்கிய நோக்கம் மேற்கு வங்கத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்றுவது.அமித் ஷாவுக்கு எதிராக அவர் கூறிய கருத்து மிகவும் வெட்கக்கேடானது. நான் அவரது கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன்... மகுவா மொய்த்ரா தான் வகிக்கும் பதவியை மதிக்க வேண்டும்.
அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம் அவர்களது கட்சியைச் சேர்ந்த வேறு எந்த எம்பியும் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க துணிவு வரக்கூடாது.அதாவது அவருக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் சட்ட விதிகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் உறுப்பினர்கள், இந்த முறை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அஞ்சுகின்றனர். இதுபோன்ற கருத்துகள் திரிணாமூல் காங்கிரஸை மேற்கு வங்கத்தில் அழிவுக்கு இட்டுச் செல்லும். திரிணாமூல் காங்கிரஸ் முகரம் பண்டிகைக்கு விடுமுறை அளித்து இஸ்லாமியர்களுக்கு உதவியது. ஆனால், அதே நேரத்தில் துர்கா பூஜை ஊர்வலத்தை தடை செய்தது.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது சீடர்களான மகுவா மொய்த்ரா போன்றவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.அவர்கள் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவ வேண்டும் என விரும்புகின்றனர். இந்த மக்கள் மம்தா பானர்ஜி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர உதவுகின்றனர்.
மேலும் படிக்க : மோடியிடம் ராகுல் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அமித்ஷா ஆவேசம்
மகுவா மொய்த்ராவுக்கு(Mahua Moitra Controversy Speech) எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இதனால் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த வேறு எந்த எம்பியும் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க துணிய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.