மோடியிடம் ராகுல் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அமித்ஷா ஆவேசம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக அவதூறு வார்த்தைகள் பிகாரில் நடைபெற்ற 'வாக்காளர் அதிகார் யாத்ரா'வில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சியை அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.
Rahul Gandhi should apologize to PM Narendra Modi Says Amit Shah
Rahul Gandhi should apologize to PM Narendra Modi Says Amit Shah
1 min read

Amit Shah on Rahul Gandhi : அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

ராகுல் காந்தியின் வெறுப்பு நிறைந்த எதிர்மறை அரசியலின் மிகக் கீழ்நிலை அவரது யாத்திரையில் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் மறைந்த தாயாருக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்(Rahul Gandhi on PM Modi Mother). இதனை நான் கண்டிக்கிறேன். ராகுல் காந்தி தொடங்கிய இந்த அரசியல் நம்மை பள்ளத்தில் இட்டுச் செல்லும். ராகுல் காந்தியிடம் கேட்கிறேன், உங்களுக்கு மானம் மிச்சமிருந்தால், பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும் அமித்ஷா பேசினார்.

பல காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலத்தில் பிரதமருக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்தியதாக கூறிய ஷா , இது புதிதல்ல, மோடி முதலமைச்சராக ஆனதிலிருந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மணிஷங்கர் ஐயர், ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி ஆகியோர் மோடிக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்தியுள்ளனர் என்றார்.

பிகாரில் காங்கிரஸின் 'வாக்காளர் அதிகார் யாத்ரா'வை விமர்சித்த மத்திய அமைச்சர், நீங்கள் பிரதமர் மோடியை எவ்வளவு திட்டினாலும், தாமரை (பாஜகவின் சின்னம்) அவ்வளவு பெரிதாக மலரும் என்று பேசினார்.

ஊடுருவியவர்கள் தேர்தல்களை பாதித்தால் ஒரு மாநிலம் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியா கூட்டணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வெளியான பின்னர் அமித் ஷாவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. தர்பங்கா காவல்துறை இது தொடர்பாக ஒருவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க : ’சிறையில் இருந்து ஆட்சி நடத்துவது கண்ணியமா’? : அமித் ஷா கேள்வி

இதற்கிடையில், அமித் ஷா கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராஜ் பவனின் பிரம்மபுத்திரா பிரிவை திறந்து வைத்தார். அங்கு பேசிய அமித்ஷா(Amit Shah Speech in Tamil), பல ஏற்ற இறக்கங்களை கண்ட பிறகு, இன்று வடகிழக்கு இந்தியா அமைதி, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு வடகிழக்கு முக்கியமான பகுதியாக வளர்ந்துள்ளது... வடகிழக்கின் வரலாறு எழுதப்படும்போது, கடந்த 11 ஆண்டுகள் பொன்னெழுத்துகளால் பதிவு செய்யப்படும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in