மேக் இன் இந்தியா திட்டம் 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

மேக் இன் இந்தியா திட்டம் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Make in India Scheme Completes 12 Years
Make in India Scheme Completes 12 Yearssource:google,thamizhalai
1 min read

Make in India Scheme Completes 12 Years: PM Narendra Modi Hails Growth

மேக் இன் இந்தியா திட்டம்: 12 ஆண்டுகள் நிறைவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, இத்திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளிலும் இந்தியா நல்ல மாற்றத்தை அடைந்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் முதன்மை நோக்கங்கள்

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 'மேக் இன் இந்தியா' திட்டம் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பது, முதலீடுகளை ஈர்ப்பது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, வணிக வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவது ஆகியவையே மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கமாக்க உள்ளது.

பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டம் 12 ஆண்டுகள் நிறைவுசெய்து நாடு நல்ல மாற்றம் அடைந்திருப்பதாகப் பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் பல தயாரிப்புகள், மேலும் பல முதலீடுகள், மேலும் பல ஏற்றுமதிகள் சாத்தியமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி வளர்ச்சியில் சாதனை

2014-ல் ஏறக்குறைய ரூ. 690 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது ரூ. 38,400 கோடியாக உயர்ந்து, 5,500 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்களின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்டவற்றின் மூலம் ரூ. 15.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.

உள்நாட்டு மொபைல் போன் உற்பத்தி

மேலும், நாட்டில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 99.2 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : கடந்த 12 ஆண்டுகளில் கிராமப்புற உள்கட்டமைப்பு அபார வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம் ...

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in