மேகேதாட்டு அணை : காவிரி மேலாண்மை அனுமதியின்றி அணை கட்ட இயலாது : மத்திய அரசு விளக்கம் : கர்நாடகவிற்கு பின்னடைவு..!

இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதாஎழுத்து பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.
Mekedatu Dam: Dam cannot be built without Cauvery Management Authority's approval; Central Government clarifies
Mekedatu Dam: Dam cannot be built without Cauvery Management Authority's approval; Central Government clarifiesgoogle
2 min read

மேகேதாட்டு அணை, முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அரசின் பதில்

காவிரி மேலாண்மை அனுமதியின்றி ,மேகேதாதுவில் அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுத்தி பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு இவ்வாறாக பதிலளித்துள்ளது.

கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரித்த ,மத்திய நீர்வள ஆணையம்

2019ஆம் ஆண்டு கர்நாடகா அரசு விரிவான திட்ட அறிக்கை (Detailed project Report )DPR தயாரித்து ,அதை மத்திய நீர்வள ஆனையத்தின் ஒப்புதலுக்கு கர்நாடகா அரசு அனுப்பியிருந்தது. இதை எதிர்த்துதான் தமிழ் நாடு அரசு தொடர்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களை இந்நாள் வரையில் மேற்கொண்டு வருகிறது.

அந்த விரிவான திட்ட அறிக்கையில் புதிதாகச் சில கூறுகளைச் சேர்க்குமாறு கடந்த 21.04.2026 அன்று கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையம் (CWC) க்கு கடிதம் எழுதியிருந்தது,

அதைப் பரிசீலித்த மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசின் கோரிக்கை காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 பிப்ரவரி 16 வெளியான தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகக் கருதி அதை மீண்டும் கர்நாடகா அரசுக்கே 29.06.2026 அன்று திருப்பி அனுப்பி விட்டது.

மேகேதாட்டு விவகாரம் , தமிழ்நாடு முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மையே

மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6.50 TMC நீர் மட்டுமே கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு மாறாக கூடுதல் நீரைப் பயன்படுத்தக் கோர முடியாது என மத்திய நீர்வள ஆணையம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகா அரசுக்கு எழுதிய கடிதம் இத்தனை ஆண்டுகாலம் தமிழ் நாடு அரசு முன்வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை நிரூபிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத்தான் புதிதாக அணை கட்டுகிறோம் என கர்நாடகா அரசு கூறிவந்தது பொய் என்பது இந்த அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் குழப்பங்களையே ஏற்படுத்தியுள்ளது

மக்களவையில் பாமக தலைவர் அன்புமணி மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்வியும் அதற்கும் மத்திய நீர்வளத்துறை தெரிவித்த பதிலும் இதன் மூலம் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது,

மத்திய நீர் வளத்துறையின் பதிலாக மேகேதாட்டுவின் குறுக்கே கட்டுமானத்தை மேற்கொள்ள கர்நாடகா அரசு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைகளுக்குள் நீரைப் பயன்படுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. என்றும் தெரிவித்திருந்தது, தற்போது மத்திய அரசின் இந்த பதில் கடும் குழப்பங்களையே ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகாவிற்கு பெரும் பின்னடைவு

காவிரி ஒழுங்காற்று குழுவில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் , இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த பரிந்துரையின் படி தமிழகத்திற்கு தன்ணீர் தர இயலாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் மத்திய அரசின் இந்த இந்த பதில் முக்கியவத்துவம் வாய்ந்தாதாகவும் கர்நாடகவிற்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in