சபாநாயகர் அறையில் காங். எம்பிக்கள் ரகளை : வீடியோ வெளியீடு

மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா அறைக்குள் காங்கிரஸ் எம்பிக்கள் வாக்குவாதம் செய்து, அவரை தரக்குறைவாக பேசியது தொடர்பான வீடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு இருக்கிறார்.
Minister Kiren Rijiju has released a video of Congress MPs arguing and insulting Lok Sabha Speaker Om Birla inside his chamber.
Minister Kiren Rijiju has released a video of Congress MPs arguing and insulting Lok Sabha Speaker Om Birla inside his chamber.Google
1 min read

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb'le Prime Minister : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மக்களவை அலுவல்கள் தினமும் பாதிக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிப்.4ம் தேதி உரையாற்ற இருந்த பிரதமர் மோடி, மக்களவைக்கு வரவில்லை.

எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக மோடி அவைக்கு வரவில்லை..

ஓம் பிர்லா குற்றச்சாட்டு

பிரதமர் மோடியை “நான்தான் அவைக்கு வர வேண்டாம் என்று கூறினேன்; அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்” என்று சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வீடியோ வெளியிட்ட கிரண் ரிஜிஜு

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இருக்கையை ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிட்ட வீடியோவை சில தினங்களுக்கு முன் அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டிருந்தார்.

சபாநாயகர் அறையில் வாக்குவாதம்

இந்நிலையில், இன்று சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்பிக்கள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களும், அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜகவினரும் உள்ளனர்.

கிரண் ரிஜிஜு வீடியோ வெளியீடு

இது குறித்து கிரண் ரிஜிஜு, “20 முதல் 25 காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவைத் தலைவர் அறைக்குள் நுழைந்து முறையற்ற வகையில் நடந்து கொண்டனர். நானும் அங்கு சென்று பார்த்தேன்.

பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். அவைத் தலைவர் மிகவும் மென்மையானவர். எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளால் அவர் வேதனையடைந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in