GEN Z இளம் வாக்காளர்களை ராகுல் தூண்டி விடுகிறார்- கிரண் ரிஜுஜூ!

Kiren Rijiju on Rahul Gandhi: பிகார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நாளை (நவ.,6) நடைபெற உள்ள நிலையில், ஹரியானாவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Minister Kiren Rijiju on Rahul Gandhi Vote Theft Remarks Incites Gen Z Protest in India
Minister Kiren Rijiju on Rahul Gandhi Vote Theft Remarks Incites Gen Z Protest in IndiaGoogle
1 min read

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Kiren Rijiju on Rahul Gandhi Vote Theft Remarks : ஹரியானா தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான 100 சதவிகித ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ பதில் அளித்துள்ளார்.

கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு

அதன்படி, டில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜுஜூ தேர்தல் ஆணையம் பற்றி நான் பேசமாட்டேன். ஏனென்றால், அவர்களே தங்கள் தேர்தல் நடைமுறைகளை பற்றி விளக்கம் அளிப்பார்கள். பாஜவின் பெயர் குறிப்பிடப்பட்டது. எனவே அதற்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

ராகுல் அவதூறு பரப்புகிறார்

அப்போது பேசிய அவர், பீஹாரில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஹரியானாவில் ஓட்டுத் திருட்டு என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் ஓட்டுச்சாவடி முகவர்களே எந்தப் புகாரும் அளிக்கவில்லை. காங்கிரஸின் தோல்வியை மறைக்க ராகுல் அவதூறு பரப்புகிறார். தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் இப்படி பேசி வருகிறார். ஓட்டு திருட்டு என்று கூறி, ஜென் இசட் (GEN Z) வாக்காளர்களை தூண்டி விடுகிறார் ராகுல். இளம் வாக்காளர்கள் எப்போதுமே பிரதமர் மோடியின் பக்கம் இருக்கின்றனர்.

வீடுகளை விட்டு வெளியில் இருக்கிறார்கள் பாஜ தொண்டர்கள்

எங்களின் தலைவர்கள், தொண்டர்கள் கடினமாக உழைக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் வெற்றி பெறுகிறோம். எந்தவித முறைகேட்டையும் நாங்கள் செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்திற்காக, பல மாதங்கள் பாஜ தொண்டர்கள் வீடுகளை விட்டு, வெளியே தான் இருக்கின்றனர். நான் இதுவரையில் 7 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன் என்று கூறினார்.

தவறு செய்தால் நீதிமன்றத்தை அணுகுவோம்

மேலும், எங்களுக்கும் வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளனர். எங்காவது தேர்தல் விதிமீறல்கள் நடக்கிறதா? என்று நாங்களும் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம். ஏதேனும் தவறு நடந்தாலோ அல்லது ஒரு அதிகாரி தவறு செய்தாலோ, நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் பலவீனங்களை மறைக்கிறார்

மேலும் பேசிய அவர், நாட்டின் உண்மையான பிரச்னையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தை திசைதிருப்பும் உத்தியை ராகுல் கையாளுகிறார். ராகுல் தனது தோல்வி, பலவீனங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஆணையம் மீது குற்றம்சாட்டுகிறார்.

தனது பலவீனங்களை மறைக்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழிபோடுகிறார். தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பதே ராகுலுக்கு பழக்கமாகி விட்டது என்று கிரண் ரிஜுஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in