எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு அறிவுரை சொன்ன கிரண் ரிஜிஜூ

Minister Kiren Rijiju Advice Rahul : மக்களவை விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் முறையான விதிகளைப் பின்பற்றி பேச வேண்டும் மத்திய விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தியுள்ளார்.
Minister Kiren Rijiju's rebuke to Rahul Gandhi after Lok Sabha Session showdown in Parliament Read News in Tamil
Minister Kiren Rijiju's rebuke to Rahul Gandhi after Lok Sabha Session showdown in Parliament Read News in TamilSource : Sansad TV
1 min read

அறிவுரைக்கான காரணம்

Minister Kiren Rijiju Advice to Rahul Gandhi in Parliament : ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதங்களில் பேச தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம் எழுதியிருந்தார் .

ராகுல் செயலால் ஒத்திவைக்கப்பட்ட சபை

ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று சபையில் மீண்டும் பேச மூன்ற போது அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்பிக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்

இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை ஒட்டி சபையை ஒத்தி வைத்தார் சபாநாயகர் .

கிரண் ரிஜிஜூ

இந்த நிலையில், மக்களவையில் எந்தவொரு உறுப்பினரும் தன்னிச்சையாகப் பேச முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு பார்லிமெண்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது

ராகுலின் கடிதத்திற்கு நான் பதில் அளித்துள்ளேன். நாங்களும் அவருக்காகக் காத்திருந்து சோர்ந்து போய் விட்டோம். ஆனால் அவர் பேசுவதாக தெரியவில்லை

விதிகளுக்கு புறம்பாக பேசுகிறார்

விதிகளுக்குப் புறம்பாகப் பேசுவேன் என்று அவர் கூறுகிறார். நாங்கள் 2 நாட்கள் காத்திருந்தோம். மற்ற உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

அவர் தன்னிச்சையாகப் பேச முடியாது. பார்லியில் விதிகளுக்குட்பட்டு தான் பேச வேண்டும் என்று அறிவுரை கூறினார் .

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in