
இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் :
S Jaishankar Meets Marco Rubio in UNGA Meet : வர்த்தகம் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பெறாத வெளிநாட்டவர், அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சம் ஆக அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்த்தி , இந்தியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். இத்தகைய காரணங்களால் இருநாட்டு உறவில் விரிசல் அதிகரித்து உள்ளது.
ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ சந்திப்பு :
India Relationship of critical importance to United States, US Secretary of State Marco Rubio : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்று இருக்கிறார். ஐநா சபையில் 27ம் தேதி(UN General Assembly 2025 Date) அவர் உரையாற்ற இருக்கிறார். இந்தநிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
முக்கிய விஷயங்கள் ஆலோசனை :
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, பாராமெடிக்கல், கனிமங்கள் உள்ளிட்டவை பற்றி அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.
இந்தியா உறவு முக்கியமானது :
ஜெய்சங்கர் உடனான சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, “
ஐநா பொதுச்சபை கூட்டத்தின்போது(UN General Assembly 2025) இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். வர்த்தகம், எரிசக்தி உள்பட எங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்சங்கர் திருப்தி, வரவேற்பு :
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. தற்போதைய கவலைக்குரிய பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்களது உறவு தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : இந்தியா மீது டிரம்ப் திடீர் பாசம் : மோடியை எதிர்பார்ப்பதாக பதிவு
ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாத நிலையில், இந்தியா சார்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்(Minister S Jaishankar in UN Meeting) பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
=======