
MIB Notice To ZEE Tamil : தமிழில் ஒளிபரப்பாகும் பொழுது போக்கு சேனல்களில் ZEE TAMIL-ம் ஒன்று. கடந்த 12ம் தேதி ஒளிபரப்பான ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’(Dance Jodi Dance) நிகழ்ச்சி, இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்று நடத்தப்பட்டது.
இந்துக் கடவுள்கள் அவமதிப்பு :
அதாவது குத்து மற்றும் கானா பாடல் நிகழ்ச்சியில், சிவன், விநாயகர், முருகன், அய்யனார், அனுமான் மற்றும் பிற இந்து தெய்வங்களைப் போல உடையணிந்த பின்னணி நடனக் கலைஞர்கள், குறைந்த உடையணிந்த பெண்ணுடன் நடனமாடியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்த பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.
ஆபாச பேச்சு, நடனம் :
சிவன் வேடமிட்ட ஆண், அனுமான் கதாபாத்திரத்தை "வாணரம்" என்று அவமரியாதையாகக் குறிப்பிட்டு பேசினார். அனுமான் கதாபாத்திரத்தில் நடித்தவர் வாலை ஆபாசமாக ஆட்டி பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தார். இத்தகைய காட்சிகள் இந்து உணர்வுகளை புண்படுத்துவதாக, சமூக ஊடகங்களில் வைரலானது.
பொதுமக்கள் வேதனை, புகார் :
வருத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான பயனர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை(Ministry Of Broadcasting), காட்சிகளை டேக் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பாடல்களும் ஒட்டுமொத்த கருப்பொருளும் எந்த மத சூழலுக்கும் ஏற்றவாறு இல்லை. வெறும் பொழுது போக்குக்காக கடவுள்களை கேலி செய்வதாக இருப்பதாக விமர்சகர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் :
இந்த புகார் குறித்து பரிசீலித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்(ZEE Tamil Notice) அனுப்பி இருக்கிறது. டான்ஸ் ஜோடி டான்ஸ்(Dance Jodi Dance Show) நிகழ்ச்சியில் இடம்பெற்ற அம்சங்கள், அதற்கான காரணத்தை ஏழு நாட்களுக்குள் விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
விதிகளை மீறி நி்கழ்ச்சி நடத்துவதா? :
மத நம்பிக்கைகளை அவமதிக்கும், வகுப்புவாத மோதலை வளர்க்கும் இத்தகைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், கேபிள் தொலைக்காட்சி(Cable TV Network) நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1994ன் கீழ் நிகழ்ச்சி குறியீட்டு விதிகளை மீறுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
====