

Modern machine to test Tirupati laddu production: Imported from France!
ஆந்திராவில் கடந்த ஆட்சியின் போது, லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் கலந்தது உறுதி செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பின் தரத்தை பரிசோதிப்பதற்கு நவீன இயந்திரத்தை இறக்குமதி செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
நவீன இயந்திரம் இறக்குமதி
3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான இ-நோஸ் மற்றும் இ-டங் எனப்படும் அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இ-நோஸ் மற்றும் இ-டங்
இ-நோஸ் மற்றும் இ-டங் எனப்படும் இந்த அதிநவீன இயந்திரங்கள் மனிதர்களின் மூக்கு மற்றும் நாக்கு போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
எளிதில் கண்டறியும் திறன்
மனிதர்களால் நுகரமுடியாத வாசனையையும் எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை .
மேலும் 25 கோடி மதிப்பீட்டிலான உணவு பரிசோதைனை ஆய்வகமும் திருமலையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தினமும் லட்சக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
ஏழுமலையான தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம்
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்க பட்ட விவகாரத்தில் அதனை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி (CBI SIT ) திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.
லட்டில் தரம் குறைந்த பொருட்கள்
மாறாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
14 பேர் கைது
இந்த சிறப்பு புலனாய்வு குழு, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரையும் நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஐ நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியது. இதில் பல்வேறு பால் உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
மேலும், ஏ-34 குற்றவாளியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரியான விஜயபாஸ்கர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
திருமலை ஜீயர் கடிதம்
இத்னைத்தொடர்ந்து திருமலை திருப்பதி பிரசாதமான லட்டு விவகார சர்ச்சை பற்றி கவலை தெரிவித்தும், பிரசாதத்தின் புனிதத் தன்மையை இனிவரும் காலங்களில் பாதுகாக்க வேண்டி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமலை ஜீயர் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர அரசின் அதிரடி நடவடிக்கை
இனிமேலும் இதுபோன்று பிரசாத தயாரிப்பில் கலப்படம் நிகழக்கூடாது என்பதற்காகத் தான் தற்போதைய ஆந்திர அரசு நவீன பரிசோதனை இயந்திரத்தை இறக்குமதி செய்யவுள்ளது.