

இந்த முகமது ஷெரீப் யார் என்றால், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள CRPF முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
இந்தத் தாக்குதலில் 7 CRPF வீரர்கள் மற்றும் ஒரு ரிக்ஷா ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகமது ஷெரீப் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம், 2019-ம் ஆண்டு முகமது ஷெரீப் உள்ளிட்ட நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 2025 அக்டோபர் மாதம் கொலை, பயங்கரவாதம் மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்தது.
நவம்பர் 10-ம் தேதி தனது 21 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த முகமது ஷெரீப்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைதொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த சுமார் ஓராண்டுக்கு பிறகு முகமது ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த அன்று முகமது ஷெரீப் தனது மகனுடன் காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதாகவும், அப்போது வழிமறித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
====================