மழைக்கால கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளில் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
Monsoon Session: Both Houses adjourned for the day due to uproar by the opposition.
Monsoon Session: Both Houses adjourned for the day due to uproar by the opposition. google
1 min read

மாநிலங்களவை கூட்டத்தொடர்

ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு கூடிய மழைக்கால கூட்டத் தொடரானது காலமான எம்பிக்களுக்கு இரங்க்ல் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகளின் அமளி

அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், தொடர் முழக்கமும்

மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை அரசு ஒடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இரு அவையிலும் கேள்விகள் முன்வைப்பு

தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது

தொடர் அமளி ,அவை ஒத்திவைப்பு

இரு அவையிலும் தொடர்ந்து ஏற்்பட்ட அமளியின் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை முற்பகல் 12: 50 மணி வரையிலும், மக்களவை நண்பகல் 1 மணி வரையிலும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் இரு அவைகளும் கூடியதும் அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை மற்றும் மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தைக் கூட்டுமாறு மாநிலங்களவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார்

கடும் கூச்சல் குழப்பம் , நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் குழப்பம் காரணமாக இரு அவையிலும் கடும் அமளியானது ஏற்்பட்டத்தை அடுத்து நாள் முழுதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது

மழைக்காலக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in