”20ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர்” : மசோதாக்கள், பாஜக வியூகம், வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்...!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ம் தேதி தொடங்கும் நிலையில், 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Monsoon Session of Parliament set to begin 20th, an all-party meeting convened for 19th.
Monsoon Session of Parliament set to begin 20th, an all-party meeting convened for 19th.AI generated
1 min read

மழைக்கால கூட்டத்தொடர்

பரபரப்பான அரசியலில் சூழலில் நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. பல்​வேறு பிரச்​சினை​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்டு உள்​ளன.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்

கடந்த ஏப்​ரல் மாதம் மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​கான மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மசோ​தாக்​கள் மூலம் மக்​கள்​தொகை அடிப்​படை​யில் மக்​கள​வைத் தொகு​தி​களை மறு​வரையறை செய்ய முடி​யும்.

மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் இந்த மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தோல்வி அடைந்​தன.

மசோதாக்கள் தாக்கல் - அரசு தீவிரம்

இந்​நிலை​யில், மழைக்​கால கூட்​டத் தொடரில் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாக்​களை மக்​களவை​யில் மீண்​டும் தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.

பாஜகவின் பலம் அதிகரிப்பு

கடந்த சில மாதங்​களில் திரிண​மூல் காங்​கிரஸ், ஆம் ஆத்​மி, சிவசேனா (உத்​தவ் அணி) கட்​சிகளைச் சேர்ந்த எம்பிக்​கள், பாஜக​வுக்கு அணி மாறி உள்​ளனர்.

இதனால் மக்​களவை, மாநிலங்​களவை​யில் பாஜக​வுக்​குக் கூடு​தல் பலம் கிடைத்​திருக்​கிறது.

இதர கட்​சிகளின் ஆதர​வோடு மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு வியூகம் வகுத்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

குதிரை பேரம் - குற்றச்சாட்டு

ஆனால், எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​களை குதிரை பேரம் மூலம் பாஜக இழுப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இதுதொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் முடிவு செய்​துள்​ளன.

30 நாட்கள் சிறை, பதவி நீக்கம் - மசோதா

பிரதமர், முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் குற்ற வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்டு 30 நாட்​களுக்கு மேல் சிறை​யில் இருந்​தால் அவர்​களைப் பதவி நீக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.

எதிர்க்கட்சிகள் வியூகம்

பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்டு உள்​ளன. நீட் வினாத்தாள் விவகாரம், அயோத்தி முறைகேடு, குதிரை பேரம், உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் முக்கிய விவாத பொருளாக கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

19ல் அனைத்துக் கட்சிக்கூட்டம்

மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது குறித்து ஜூலை 19-ம் தேதி அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​துள்​ளது.

நாட்​டின் நலன் கருதி மக்​களவை, மாநிலங்​களவையைச் சுமுக​மாக நடத்த எதிர்க்​கட்​சிகள் ஆதரவு கோரப்​படும்​ என்​று மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in