

இந்தியா - ஐரோப்பிய யூனியன்
Mother of All Deals India-EU Summit Free Trade Agreement Deal in Tamil : இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியது. தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தாலும், 19 ஆண்டுகளாக ஆக்கப்பூர்வமான முடிவு எதையும் எட்ட முடியவில்லை.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு
குடியரசு தின விழாவில் பங்கேற்க ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். டெல்லியில் தங்கி இருக்கும் அவர்கள். 16வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
அப்போது நடைபெற்ற ஆக்கப்பூர்வமான போது, தடையற்ற ஒப்பந்தம் செய்வதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்படும்.
இது வோக்ஸ்வேகன், BMW, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய நன்மையாக அமையும்.
இந்திய ஜவுளிக்கு வரி கிடையாது
இந்திய ஜவுளித் துறைக்கு ஐரோப்பியச் சந்தையில் வரி இல்லாத அனுமதி கிடைக்கும். இதனால் வங்கதேசம் மற்றும் வியட்நாம் நாடுகளுடனான போட்டியில் இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தம் வலுச்சேர்க்கும்.
விவசாய பொருட்களுக்கு வரிச்சலுகை
ஜனவரி முதல் தேதில் முதல் ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் 87% ஏற்றுமதிப் பொருட்களுக்கான Generalised Scheme of Preferences எனப்படும் வரிச் சலுகைகளை ரத்து செய்துள்ளது.
இந்தியாவுக்கு விசா கெடுபிடி தளர்வு
இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வேலை செய்வதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளது.
இந்தியாவுக்கு பெரும் பயன்
ஐரோப்பிய விஸ்கி மற்றும் ஒயின்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா படிப்படியாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் 27 வளர்ந்த நாடுகள் உள்ளதால், இந்தியா செய்து கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு வருடத்தில் அமலுக்கு வரும்
தடையற்ற ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வர இன்னும் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
===============