ஐபில் போட்டியில் தோனி விளையாட மாட்டார் : தசைபிடிப்பு காரணம் என அறிவிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்!

MS Dhoni Ruled Out IPL 2026 : MS தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரு வாரங்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
MS Dhoni Ruled Out IPL 2026 : IPL administration has officially announced that MS Dhoni will not play in  IPL series
MS Dhoni Ruled Out IPL 2026 : IPL administration has officially announced that MS Dhoni will not play in IPL seriesgoogle
1 min read

CSK ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி

MS Dhoni Ruled Out IPL 2026 : தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரு வாரங்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2026 சீசன் தொடர் தொடங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது.

நடப்பு தொடரின் முதல் போட்டி

நடப்பு ஆண்டு முதல் தொடரை தோனி இல்லாத நிலையில், மார்ச் 30-ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது

அடுத்தடுத்த போட்டிகளையும் இழப்பதற்கான வாய்ப்பு

நடப்பாண்டு நடைபெறும் முதல் ஆட்டம் மட்டுமல்லாது ,அடுத்த இரண்டு வாரங்களில் எதிர்கொள்ளவிருக்கும் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் முக்கிய ஆட்டங்களையும் தோனி தவறவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து

ஐபில் வரலாற்றில் சாதனை படைத்த தோனி

இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் 278 போட்டிகளுடன் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி .

அவ்வாறு இருக்கும் நிலையில், இவர் இல்லாது இருப்பது csk அணிக்கு சவாலாகவே ரம்யா போகிறது இருப்பினும் ,

சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா மற்றும் உர்வில் படேல் என மூன்று மாற்று வீரர்கள் சிஎஸ்கே அணியில் தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in