10 ஆண்டுகளில் இல்லாத மழை, 30 செ.மீ. பொழிவு : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை : ரெட் அலெர்ட், இயல்பு வாழ்க்கை முடக்கம்!

மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 12 மணி நேரத்தில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.
Mumbai has been lashed by 30 cm of rain in 12 hours—the highest amount in a decade
Mumbai has been lashed by 30 cm of rain in 12 hours—the highest amount in a decadegoogle
1 min read

தாமதமாக தொடங்கிய மழை

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் மகாராஷ்டிராவில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்தமுறை 13 நாட்கள் தாமதமாக தொடங்கி இருக்கிறது.

30 செ.மீ. மழை

தலைநகர் மும்பையில் நேற்று தொடங்கிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. 12 மணி நேரத்தில் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது மும்பை

மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த மழை நீடிப்பதால் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளே மழை வெளுத்து வாங்கி இருப்பதால், இனி அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

10 ஆண்டுகளில் முதன்முறை

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் 30 சென்டி மீட்டர் மழை பெய்தது கிடையாது. எனவே, இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

வெள்ளக்காடான சாலைகள்

மும்பையின் முக்கிய சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து இருப்பதால், போக்குவரத்து முடங்கி உள்ளது. ரயில் போக்குவரத்து முடங்கி இருக்கிறது.

இப்போது பெய்து வரும் மழை, மும்பை நகரின் குடிநீர் தேவையை தீர்க்கும் என்பதால், மக்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in