தீவிர புயலானது “முரசு” : ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது : சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை..!

தீவிரப் புயலாக வலுப்பெற்ற “முரசு”, ஆந்திராவை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
"Murasu"  intensified into a severe cyclonic storm,  moving rapidly towards Andhra Pradesh
"Murasu" intensified into a severe cyclonic storm, moving rapidly towards Andhra Pradesh source:thamizhalai,ai generated
2 min read

வங்கக் கடலில் முரசு புயல்

வங்கக் கடலில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயலாக உருவான அர்னாப் ஆந்திராவில் கரையை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதன் வடுக்கள் மறைவதற்குள் ஒரு வாரத்தில் 2வது புயலாக “முரசு” உருவானது.

தீவிரப் புயலான “முரசு”

“மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாப் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயலானது, மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் ஏறக்குறைய வடமேற்குத் திசையில் நகர்ந்து, கடுமையான புயலாக இன்று வலுப்பெற்றது.

சென்னைக்கு அருகே புயல்

சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 260 கி.மீ., ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்குக் கிழக்கு-தென்கிழக்கே 290 கி.மீ., ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணத்திற்குக் தெற்கு-தென்கிழக்கே 320 கி.மீ., காவலிக்குக் கிழக்கு-தென்கிழக்கே 310 கி.மீ., ஒங்கோலுக்குத் தென்கிழக்கே 330 கி.மீ. மற்றும் விசாகப்பட்டணத்திற்குத் தெற்கே 470 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே கடக்கும்

இது தொடர்ந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் புயலானது கரையை கடந்து விடும். ஒங்கோலுக்கு அருகிலுள்ள நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே கரையை கடக்கிறது.

110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும், சில சமயங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை

முரசு புயலின் விளைவாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர், மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

வட மாவட்டங்களில் மழை வெளுக்கும்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளையும் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன/மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

==========