West Bangal : மம்தாவை கைவிடும் இஸ்லாமியர்கள் : SIR குளறுபடி, வாக்களிப்பதில் சிக்கல் : ஆட்டத்தை கலைக்கும் ஓவைசி!

மேற்கு வங்கத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் மம்தா கரை சேர்த்த இஸ்லாமியர்கள், எஸ்ஐஆர் விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருப்பது, திரிணாமூல் வெற்றியை பாதிக்கும் எனத் தெரிகிறது.
Muslims, who have wooed by Mamata in elections so far in West Bengal, are deeply dissatisfied with the SIR issue,
Muslims, who have wooed by Mamata in elections so far in West Bengal, are deeply dissatisfied with the SIR issuegoogle
1 min read

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் எந்த தேர்தல் என்றாலும் முஸ்லீம் வாக்குகள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள 27% இஸ்லாமியர்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரிணாமுல் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். ஆனால், இந்த முறை அதில் மாற்றம் தென்படத் தொடங்கி இருக்கிறனது.

முஸ்லீம் வாக்காளர்கள் ஆதிக்கம்

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தினாஜ்பூர், பிர்பூம் போன்ற மாவட்டங்கள் திரிணாமூல் கோட்டையாக இருந்தது.

இதில் மாற்றம் தென்படத் தொடங்கி விட்டது. அதற்கு முக்கிய காரணம் SIR. பொருளாதார வளர்ச்சியின்மை, ஊழல் ஆகியவை அவர்களை மாற்றி யோசிக்க வைத்து இருக்கிறது.

இஸ்லாமியர்கள் அதிருப்தி

மம்தா நேர்மையானவராக கருதப்பட்டாலும், உள்ளூர் கட்சியினர் ஊழலில் திளைக்கின்றனர். இது இஸ்லாமியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

ஆம் ஜனதா உன்னயன் கட்சி

பாபர் மசூதியை போன்று ஒரு மசூதியை கட்ட முயற்சித்து, திரிணாமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, ஹுமாயூன் கபீர், தனியாக ஆம் ஜனதா உன்னயன் கட்சியை தொடங்கி தேர்தலை சந்திக்கிறார்.

முஸ்லீம்கள் ஆதரவு அதிகம்

அவருக்கு அங்கு முஸ்லீம் இளைஞர்கள், மத குருமார்கள் மத்தியில் ஆதரவு பெருகி இருக்கிறது. ஹுமாயூன் கபீர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், திரிணாமூல் வாக்குகளை சிதறடிக்கலாம். இதனால் வெற்றி வாய்ப்பு பறிபோனால், அது பாஜகவுக்கு சாதகமாக முடியலாம்.

ஓவைசியுடன் கைகோர்ப்பு

ஹுமாயூன் கபூர் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதால், திரிணாமூலுக்கு இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.

வாக்குரிமை சிக்கல்

இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குரிமையே சர்ச்சையில் உள்ளது. எஸ்ஐஆர் பணிகளில் பல இஸ்லாமியர்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. பலரது வாக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருக்கிறது.

அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், மம்தாவின் பாடு திண்டாட்டமாகி விடும்.இது திரிணாமுலுக்கு எதிராகப் போகலாம்.

மம்தா மீது அதிருப்தி

எஸ்ஐஆர் விவகாரத்தில் தங்களைக் காப்பாற்ற மம்தாவால் முடியவில்லை என இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.

இதுவும் சிக்கலுக்கு வழிவகுத்து இருக்கிறது. இது திரிணாமூல் காங்கிரசின் எதிர்கால அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மம்தா மீது நம்பிக்கை

அதேசமயம், மம்தா பானர்ஜி என்ற தலைவருக்கு முஸ்லீம் வாக்காளர்களிடையே நிகரற்ற செல்வாக்கு இருக்கிறது. அவரது இமேஜ் பலரால் பெரிதும் மதிக்கப்படுகிறது.

எனவே, முஸ்லீம் வாக்குகள் சிதறினாலும் கூட அது முழுமையாக திரிணாமுலை விட்டுப் போகாது.

மம்தாவுக்கு நெருக்கடி தீரவில்லை

ஆனாலும் சில ஆயிரம் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமானால், அது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திரிணாமூல் வெற்றிக்கனியை பறிக்க முடியாத சூழல் உருவாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி பிகாரை போல வாக்குகளை பிரித்து விட்டால், அது ஆளுங்கட்சியினை தோல்விக்கு வழி வகுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in