டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் தொடர்வு? 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்புக்கு வாரியம் ஒப்புதல்...

2027-ல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், என். சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகள் தலைவராக நீட்டிக்க டாடா சன்ஸ் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
N. Chandrasekaran Set to Continue as Tata Sons Chairman for Another Five Years
N. Chandrasekaran Set to Continue as Tata Sons Chairman for Another Five YearsGoogle
1 min read

திடீர் திருப்பம் ஏற்படுத்திய டாடா சன்ஸ் முடிவு

டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் தொடருவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவு டாடா குழுமத்தின் எதிர்கால தலைமை குறித்து நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

விலகுவதாக அறிவித்திருந்த சந்திரசேகரன் :

கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடையும் நிலையில், மீண்டும் பதவியை நாடப்போவதில்லை என்று என். சந்திரசேகரன் அறிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு மாற்றாக யார் வருவார்கள் என்ற விவாதம் டாடா குழுமத்தில் தீவிரமாக நடைபெற்றது.

ஏன் தொடர வேண்டும் என்ற கோரிக்கை?

டாடா சன்ஸ் நியமன மற்றும் ஊதியக் குழு (NRC), நிறுவனத்தின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சந்திரசேகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நிர்வாகத் தொடர்ச்சிக்காக அவரது அனுபவம் அவசியம் என கருதப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்பிஐ உத்தரவால் முக்கியமான காலகட்டம் :

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு சமீபத்தில் பெரும் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், நிறுவனத்தின் தலைமைத்துவத்தில் நிலைத்தன்மை தேவைப்படுவதாக சில இயக்குநர்கள் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017 முதல் டாடா குழுமத்தை வழிநடத்தும் சந்திரசேகரன் :

2017-ஆம் ஆண்டு சைரஸ் மிஸ்திரிக்கு பிறகு டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற என். சந்திரசேகரன், டாடா குழுமத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார்.

ஏர் இந்தியா கையகப்படுத்தல், டிஜிட்டல் முதலீடுகள், உலகளாவிய விரிவாக்கம் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் :

வாரியத்தின் ஒப்புதல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டாடா சன்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதைக் தொழில்துறை வட்டாரங்களும் முதலீட்டாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த முடிவு டாடா குழுமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in