19 நாடுகளின் நாடாளுமன்றங்களில் "இந்தியாவின் குரல்" : வரலாற்று சாதனை படைத்த பிரதமர் மோடி : உலகளாவிய முக்கியத்துவம்...!

12 ஆண்டுகளாக பிரதமராக பொறுப்பு வகித்து வரும் நரேந்திர மோடி, 19 நாடுகளின் நாடாளுமன்றங்களில் இந்தியாவின் குரலை ஒலிக்கச் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.
Modi, Prime Minister for 12 years, achieved a record by making India's voice heard in  parliaments of 19 countries
Modi, Prime Minister for 12 years, achieved a record by making India's voice heard in parliaments of 19 countriesgoogle
2 min read

12 ஆண்டுகள் பிரதமராக மோடி

Prime Minister Narendra Modi has addressed the parliaments of 19 different countries between 2014 and 2026, marking a record for any Indian head of government :

2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மூன்று முறை தொடர்ந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி இருக்கிறார்.

உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம்

இத்தனை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர், இருதரப்பு நல்லுறவை வலுப்பெறச் செய்ததோடு, இந்தியாவின் நட்புறவை உலக அரங்கில் வலிமையாக நிலைநாட்டி இருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சி - உலகிற்கு நன்மை

இந்தியாவின் வளர்ச்சி என்பது உலக நாடுகள் அனைத்தின் நன்மைக்கானது என்பதை உலகத் தலைவர்கள் மத்தியில் மோடி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பதவி வகித்த நேருவின் சாதனையை ஜூன் 10 ( நாளை ) கடக்க இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 4,398 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்க வேண்டும். நாளை இதை கடக்க இருக்கிறார் பிரதமர் மோடி.

ஆம். நாளையோடு 4,399 நாட்கள் என்ற சாதனையை அவர் படைக்க இருக்கிறார்.

உலகிற்கு இந்தியாவின் தேவை

நேரு காலம் தொடங்கி மோடி ஆட்சி வரை உலக அரங்கில் இந்தியாவின் குரல் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இன்றைய சூழலில் இந்தியாவின் தேவை உலகிற்கு எந்த அளவுக்கு தேவைப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

3 வெளிநாட்டு நாடாளுமன்றங்கள்

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது வாழ்நாளில் மொத்தம் 3 வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளார். 1949ல் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சென்றபோது அங்கு உரையாற்றினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை

அமெரிக்காவின் 'மனதையும் இதயத்தையும்' கண்டறியும் ஒரு தேடலாகவே தனது பயணத்தைக் குறிப்பிட்டார். தொழில்நுட்ப மற்றும் இயந்திரவியல் ஒத்துழைப்பை இந்தியா வரவேற்பதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் இந்தியா தனது கடின உழைப்பால் பெற்ற சுதந்திரத்தை எந்தவொரு பொருள்சார் ஆதாயத்திற்காகவும் விட்டுக் கொடுக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதிய தேசத்தின் வலிமையான குரல்

சுயசார்பையே முதன்மையாக நம்பியிருக்கும் என்றும் மிகவும் எச்சரிக்கையுடனும் தெளிவாகவும் முழங்கினார். அது, உலக நாடுகளின் உதவியை நாடினாலும் எதற்கும் அடிபணியாத ஒரு புதிய சுதந்திர தேசத்தின் குரலாக நேரு பேச்சு அமைந்தது.

19 நாடாளுமன்றங்களில் உரை

2014 முதல் 2026 வரையிலான ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கிலும் உள்ள 19 வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றி, மிக உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவின் உலகளாவிய குரல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இது முக்கியமான சான்றாகும்.

நாடாளுமன்றங்களில் மோடியின் குரல்

2014ல் பதவியேற்றவுடன் பூடான், நேபாளம், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றிய மோடி, அடுத்தடுத்த ஆண்டுகளில் மொரிஷியஸ், இலங்கை, மங்கோலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்...

உகாண்டா, மாலத்தீவு, கயானா, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா மற்றும் எத்தியோப்பியா என உலகம் முழுவதும் இந்தியாவின் குரலாக ஒலித்தார்.

2026ம் ஆண்டில் அண்மையில் இஸ்ரேலின் 'கினசெட்' (Knesset) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் இரண்டுமுறை உரை

2016 மற்றும் 2023ல் அமெரிக்க நாடாளுமன்ற பிரதமர் மோடி ஆற்றிய உரைகள், இந்தியா அடைந்துள்ள பொருளாதார வலிமையை வெளிப்படுத்தியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டுத்தொடரில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

"இந்தியா வளரும் போது, ஒட்டுமொத்த உலகமும் வளர்கிறது" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி முழங்கினார்.

'வசுதைவ குடும்பகம்'

இந்தியாவின் உலகளாவிய தொடர்பை 'வசுதைவ குடும்பகம்' (உலகே ஒரு குடும்பம்) என்ற கோட்பாட்டின் மூலம் சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி நிலைநிறுத்தி இருக்கிறார்.

19 வெளிநாட்டு நாடாளுமன்ற அழைப்புகள் என்பது தனிநபர் இராஜதந்திரம் மட்டுமல்லாமல், உலகளாவிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பற்கான அடையாளமாகும்.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in