ஏப்ரல் 1 : 900 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு : தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவு!

Prices of Essential Drugs Price Hike : வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் 1 முதல் 0.65% சதவீதம் உயருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Pharmaceutical Pricing Authority announced Prices of essential medicines to rise by 0.65% Effective from April
National Pharmaceutical Pricing Authority announced Prices of essential medicines to rise by 0.65% Effective from Aprilgoogle
1 min read

தேசிய மருந்து விலை நிர்ணயத்தின் அறிவிப்பு

Prices of Essential Drugs Set to Increase from April : மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று தேசிய மருந்து விலை நிர்ணயம் அதிகாரபூர்வமாக அறிவித்துளளது

போருக்கும் விலை உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வுக்கும் ,ஈரான் அமெரிக்க போருக்கும் எந்த தொடுப்பும் இல்லை என இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் வினோத் கலானி தெரிவித்துள்ளார்.

அரசின் முன் அனுமதி பெறாமல் விலை நிர்ணயிக்க அதிகாரம் உள்ளது

ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துக் கலவைகளின் அதிகபட்ச சில்லறை விலையை உற்பத்தியாளர்கள், அரசின் முன் அனுமதி பெறாமல் விலையை அதிகரிக்கலாம் என்று ஒரு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவான விலையே

இது குறித்து பேசிய கலானி ,தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசு நன்கு அறிந்திருப்பதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறிய அவர் , இந்த விலை உயர்வு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானதே என்று தெரிவித்துளளார்

டீம் இந்தியா ; ஆலோசனை

நீடித்து வரும் போர் சூழல் ,சிக்கலை ஆலோசிப்பதற்காக டீம் இந்தியா முறையில் குழுக்களை அமைத்து ,மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி நடவடிக்கையை மேற்கொண்டு இருப்தாகவும் அவர் தெரிவித்துளளார்.

போர் சம்மந்தப்பட் சிக்கல்களை ,விளைவுகளை கைளாள்வதோடு, எரிபொருள், எரிவாயு, உரங்கள், பணவீக்கம், சந்தைகள் என அனைத்தும் பாதிக்கப்படாத வகையில் உத்திகளை வகுத்து பிரச்னைகளை நிச்சயமாகத் தீர்க்கும் என்றும் கலானி குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in