

நவராத்திரி பிரம்மோற்சவம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
16ம் தேதி கருட சேவை நடைபெற இருக்கிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் 20 வரை விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவுப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் - சிறப்பு பேருந்துகள்
பிரமோற்சவ விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தினசரி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி..
நாகர்கோவில், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கும், அங்கிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.த
சிறப்பு பேருந்துகள் - ரிசர்வேஷன் வசதி
சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, காரைக்குடி, நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
===================