

என்டிஏ அசத்தல் வெற்றி
Bihar Results 2025 : NDA Heads For Landslide, 200-Seat Mark In Historic Mandate : பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கிடைத்துள்ள வெற்றி என்பது, யாருமே கணிக்காத ஒன்று. நரேந்திர மோடி - நிதிஷ்குமார் இடையேயான ஆகச்சிறந்த நல்லுறவு, இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.
மோடி, நிதிஷ் செல்வாக்கு
நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு இந்த எழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. 2010ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி 206 இடங்களை வென்று இருந்தது. பிரதமர் மோடி அடிக்கடி கூறுவது போல இரட்டை எஞ்சின் போல செயல்பட்ட மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், வெற்றியை சாத்தியமாக்கி 10வது முறையாக நிதிஷ்குமாரை முதல்வராக்க இருக்கிறது.
200 தொகுதிகளில் என்டிஏ
மூன்று மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 92 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. லோக் ஜனசக்தி 22 இடங்களிலும், பிற கூட்டணி கட்சிகள் 8 இடங்களையும் வசப்படுத்துகின்றன.
40 இடங்களில் மகாகத்பந்தன் கூட்டணி
மகாகத்பந்தன் கூட்டணிக்கு 40 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 31 இடங்களிலும், காங்கிரஸ் 4, சிபிஐ(எம்எல்) 5, சிபிஐ-எம் 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் இதுவரை சந்திக்க பெரிய சறுக்கலை எதிர்கொள்கிறது.
'சுசாஷன் பாபு' மீதான நம்பிக்கை
இரண்டு தசாப்தங்களாக அதாவது 20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார் நிதிஷ்குமார். லாலுவின் காட்டாட்சியில் இருந்து அவர் பிகாரை மீட்டு எடுத்ததால், "சுசாஷன் பாபு" என்று கொண்டாடப்படுகிறார். என்டிஏ கூட்டணிக்கு கிடைத்து இருக்கும் இந்த வெற்றி, நிதிஷ் ஆட்சி மாதிரியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.
மோடி - நிதிஷ் மேஜிக் கூட்டணி
தன்னம்பிக்கையுடனும், ஒருங்கிணைப்புடனும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் இணைந்தது இந்த முறை தேர்தல் களத்தை மாற்றியமைத்தது. பிரசாரம் முழுவதும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பிரதமர் மோடி உறுதியுடன் நின்றார். வலிமையான கூட்டணி நலத்திட்டங்கள் மக்களிடன் நம்பிக்கையை அதிகரிக்க செய்தது.
வலிமையான தேர்தல் சக்தி
பிரதமர் மோடியின் தேசிய அளவிலான ஈர்ப்பும், பீகார் முதல்வரின் விரிவான அடிமட்ட செல்வாக்கும் இணைந்து ஒரு வலிமையான தேர்தல் சக்தியை உருவாக்கியது. இந்த அரசியல் வேகம், பிகாரில், சுனாமியாய் உருவெடுத்து, மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
வன்முறை இல்லாத தேர்தல்
வன்முறைத் தேர்தல்களுக்கு பெயர் போன பிகார், இந்த முறை மிகவும் அமைதியான தேர்தலை சந்தித்தது. கடந்த கால தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தால், 1985 தேர்தலில் 63 பேர் இறந்தனர் மற்றும் 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது; 1990ல் 87 இறப்புகள் பதிவாகின. 2005ல், 660 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு. ஆனால், 2025 தேர்தலில் பூஜ்ஜிய மறுவாக்குப்பதிவு மற்றும் பூஜ்ஜிய வன்முறை பதிவாகி பெரும் மாற்றத்திற்கு வித்திட்டு இருக்கிறது.
======