Diamond League ஈட்டி எறிதல் : நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்

Neeraj Chopra in Diamond League Javelin Throw 2025 : சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Neeraj Chopra in Diamond League Javelin Throw 2025
Neeraj Chopra in Diamond League Javelin Throw 2025https://x.com/search?q=%23NeerajChopra
1 min read

Neeraj Chopra in Diamond League Javelin Throw 2025 : சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர், இந்தியாவின் நீரஞ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெர்மனி வீரருக்கு தங்கம் :

இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர்(Julian Weber), தனது முதல் முயற்சியில் 91.37 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். 2வது முயற்சியில் 91.51 மீட்டர் தூரம் எறிந்து முன்னிலை பெற்றார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கம்(Diamond League Javelin Throw 2025 Winner) வென்றார்.

நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி :

இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில், 84.35 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அடுத்த 3 முயற்சிகளிலும், பவுல் செய்த நீரஜ், கடைசி முயற்சியில், 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2வது இடத்தை பிடித்தார்(Neeraj Chopra Wins Silver Medal). இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டை சேர்ந்த பிப் வால்காட்ர் 84.95 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஈட்டி எறிதலில் அசத்தும் நீரஜ் :

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பங்கேற்ற கடைசி 26 போட்டிகளில் நீரஜ் சோப்ரா, முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

தங்கம் தான் எனது இலக்கு :

வெள்ளி பதக்கம் வென்றது பற்றி கருத்து தெரிவித்த நீரஜ் சோப்ரா, “இந்தப் போட்டி அவ்வளவு மோசமாக இல்லை. நாங்கள் உலக சாம்பியன்ஷிப்பை நெருங்கி வருகிறோம். எனவே, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வீச வேண்டும். சில விஷயங்கள் நன்றாக நடந்தன, சில விஷயங்கள் நடக்கவில்லை. தொலைதூர எறிதல்களை விட தங்கம் முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க : உலகின் நம்பர் 1 வீரர்: ஈட்டி எறிதலில் சாதித்த நீரஜ் சோப்ரா

அடுத்த மாதம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு, ஜூலியன் வெபரை மட்டும் அல்ல, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீமையும் நீரஜ் சோப்ரா எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in