தேர்வு முறைகளில் சீரமைப்பு : ”நந்தன் நிலகேனி தலைமையில் உயர்மட்ட குழு” : பிரதமர் மோடி அறிவிப்பு...!

இந்த உயர் குழு தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரை செய்யும் .பல முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
NEET Exam Reform: High-level committee headed by Nilakeni; PM Modi announces.
NEET Exam Reform: High-level committee headed by Nilakeni; PM Modi announces.google
1 min read

முடிவுக்கு வந்த போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தாரில் நீட் தேர்வி வினாத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு 1ம்கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ,

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும போன்ற கோரிக்கைகளை மத்திய அர்சு ஏற்ற்கொணடதும் , மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையிலும் 35 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த போராட்டமானது முடிவுகு வந்துள்ளது

தேர்வை நம்பகமான முறையில் நடத்த உயர்மட்ட குழு

சமூக ஊடக்த்தில் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கும் பிரதமர் மோடி ,உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு தேர்வு முறையை மேலும் நம்பகமானதாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

முக்கிய சீர்திருத்தங்கள் - பிரதமர் உறுதி

என்றும் இந்த உயர் குழு தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்படி பல முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்

நிலகேனி தலைமையில் உயர்மட்ட குழு

இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத், முன்னாள் ஐபி இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலாளர் அனிதா அகர்வால், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த பிறகு பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் வீடியோவில் தோன்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது இது 3வது முறையாகும்

மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி

நீட் தேர்வு விவகாரங்களில் , தேர்வை சீரமைக்கும் வகையில் பிரதமரின் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் வெளியிட்ட பதிவில்,

2 ஆண்டுகளுக்கு முன்பு, நீட்-யுஜி வினாத்தாள் கசிவு ஊழலுக்குப் பிறகு, ஜூன் 2024-ல் அமைக்கப்பட்ட கே. ராதாகிருஷ்ணன் குழுவின் தற்போதைய நிலை குறித்து நாட்டுக்கு விளக்குங்கள். அந்த குழு சமர்ப்பித்த 184 பக்க அறிக்கையின் நிலை என்ன?’’ என கேள்வி எழுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

==============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in