நீட் மறுதேர்வு : "முறைகேடுகளை தடுக்க ஒத்திகை, தேசியத் தேர்வு முகமை தெரிவிப்பு" : கண்காணிப்பில் CRPF வீரர்​கள்..!

வினாத்தாள் கசிவு காரணமாக நாடும் முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்ப்ட்ட நிலையில் மறுத்தேர்வு நாளை நடைபெருகிறது
NEET re-examination to be held tomorrow; National Testing Agency announces a dry run to prevent irregularities.
NEET re-examination to be held tomorrow; National Testing Agency announces a dry run to prevent irregularities. google
2 min read

நாளை நடைப்பெறும் நீட் மறுத்தேர்வு

வினாத்தாள் கசிவு காரணமாக நாடும் முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்ப்ட்ட நிலையில் மறுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.

இதனையொட்டி குளறுபடிகள் ஏதும் நடக்காதவாறு இன்று ஒத்திகையை மேற்கொள்வதாக தேசிய தேர்வுகள் முகமையான் என்டிஏ அறிவித்துள்ளது

வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகிராம் செயலி முடக்கம்

வினாத்தாள் கசிவை தடுக்க , வினாத்​தாள்களைக் கொண்டு செல்ல இந்​திய விமானப் படை சேவையைப் பயன்​படுத்​தப்​படு​வது உள்​ளிட்ட முக்​கிய நடவடிக்​கை​களில் தேசிய தேர்வுகள் முகமை ஈடுபட்டு வருகிறது

கடந்த நீட் தேர்​வின் போது ஒரு கும்பல் டெலிகி​ராம் செயலியைப் பயன்​படுத்தி வினாத்​தாள்களைக் கசி​ய​விட்​டது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளதான் எதிரொலி காரணமாக அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு தடுக்க ஜூன் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசு தற்​காலிக​மாகத் தடை விதித்​துள்ளது குறிப்பிடத்தக்கது

தேர்வை சுமுகமாக நடத்தவும் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். நீட் மறு தேர்வு நாளை நடைபெறும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் , தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றன்ர் அவர்களுக்கு எந்த இடைறும் நடக்காதவாறு கண்காணிக்க உத்தரவானது அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

தீவிர பாதுகாப்பில் சிஆர்​பிஎஃப் வீரர்​கள்

குறிப்பாக ஹைத​ரா​பாத் மற்​றும் அகம​தா​பாத் ஆகிய முதன்மை மையங்​களில் இருந்து தேர்வு நடத்​தப்​படும் 551 நகரங்​களின் மையங்​கள் வரையி​லான ஒட்​டுமொத்த பயணத்​தி​லும் சிஐஎஸ்​எஃப் மற்​றும் சிஆர்​பிஎஃப் வீரர்​கள் தீவிர​மான பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்​முறை முழு​வதும் தொடர்ச்​சி​யான கண்​காணிப்பை உறுதி செய்ய, என்​டிஏ பல அடுக்கு பாது​காப்பு உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளது. தேர்வு மையங்​கள் முழு​வதும் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு வருகின்​றனர்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

நீட் மறுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிகாக தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . சென்னையில் புறநகர் ரயில்கள் வார அட்டவணையின் படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது , மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் நீட் எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீட் மறுத்தேர்வு : நிமிடத்தை அதிகரித்த என்டிஏ

நீட் மறுத்தேர்வில் சில மாற்றங்களை செய்து தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது , அதனபடி தேர்வு கால அளவு 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு 5.15 மணிக்கு நிறைவடையும். தேர்வு தொடங்கும் போதும், முடியும்போதும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் அடங்கும்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in